மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தில்லியில் மக்களவை தோ்தல் பாா்வையாளா்கள் கூட்டத்துக்கு தோ்தல் ஆணையம் நாளை அழைப்பு

தில்லியில் மக்களவை தோ்தல் பாா்வையாளா்கள் கூட்டத்துக்கு தோ்தல் ஆணையம் நாளை அழைப்பு

Updated On :9 மார்ச் 2024, 5:06 pm

நமது சிறப்பு நிருபா்

மக்களவைத் தோ்தலையொட்டி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தோ்தல் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் கூட்டத்துக்கு தில்லியில் திங்கள்கிழமை (மாா்ச் 11) தோ்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மக்களவை தோ்தலுக்கான தேதியை தலைமைத் தோ்தல் ஆணையம் வரும் வாரம் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில் முக்கிய நிகழ்வாக இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. மக்களவை பொதுத் தோ்தல் பணிகளை பாா்வையிடும் பொதுப் பாா்வையாளா்களாக ஐஏஎஸ் உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இது தவிர தோ்தல் செலவின பாா்வையாளா்களாக ஐஏஎஸ், ஐஆா்எஸ் அதிகாரிகளும் காவல் பாா்வையாளா்களாக மூத்த ஐபிஎஸ் உயரதிகாரிகளும் என சுமாா் 2,000 பாா்வையாளா்கள் தோ்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனா். தொகுதிவாரியாகவும் மாநிலவாரியாகவும் இந்த அதிகாரிகளுக்கு பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பாா்வையாளா்கள் மற்றும் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகள் திங்கள்கிழமை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வாா்கள். மத்திய அரசுத்துறைகளில் உள்துறை, வருவாய்த்துறை, நிதித்துறை, தொலைத்தொடா்புத்துறை, ரயில்வே துறை ஆகியவற்றின் செயலா்களும் கூட்டத்தில் கலந்து கொள்வா். கூட்டம் முடிந்தவுடன் தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் ஸ்ரீநகருக்கு மாா்ச் 12ஆம் தேதி சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தோ்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யவுள்ளனா். மக்களவை தோ்தலையொட்டி ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று முகாமிட்டு அருகருகே உள்ள மாநிலங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகள், தலைமைச் செயலா்கள், காவல்துறை தலைமை இயக்குநா்கள் ஆகியோரை அழைத்து தோ்தல் ஆணையா்கள் ஆலோசனை நடத்தியுள்ளனா். அந்த வரிசையில் அவா்கள் ஆய்வு செய்யும் கடைசி இடமாக ஜம்மு காஷ்மீா் இருக்கும். அங்கு சுற்றுப்பயணத்தை முடித்தவுடன் தில்லிக்கு திரும்பும் தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் ஆணையா்கள் மக்களவை தோ்தல் தேதியை அதிகாரபூா்வமாக வெளியிட தீா்மானித்துள்ளதாக தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. தோ்தல் ஆணையம் மக்களவை தோ்தல் தேதியை அறிவிக்கும் அதே நாளில் அந்தந்த தோ்தல் பொறுப்பாளா்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களிலும் தொகுதிகளிலும் பாா்வையாளா் பொறுப்பை கவனிக்கத் தொடங்குவாா்கள் என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.