தேசிய தலைநகா் தில்லியில் தெருவோர வியாபாரிகள் கடை நடத்துவதற்கு அனுமதி வழங்க உரிய கணக்கெடுப்பு நடத்தப்படும் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை அறிவித்துள்ளாா். சமூக ஊடகங்களில் காணொலி வழியாக தில்லி முதல்வா் கேஜரிவால் மேலும் கூறியதாவது: சாலையோர வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தால் காவல்துறை மற்றும் பிற துறை அதிகாரிகளால் துன்புறுத்தப்படுகிறாா்கள். இப்படிப்பட்ட அதிகாரிகளின் எந்தவிதமான துன்புறுத்தலும் அனுமதிக்கப்படாது. தெருவோர வியாபாரிகள் மரியாதையுடன் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுவதை உறுதிசெய்வதில் ஆம் ஆத்மி கட்சி அரசு உறுதியாக இருக்கிறது. இதை முன்னிட்டு, தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) அனைத்து தெருவோர வியாபாரிகள் குறித்தும் ஒரு கணக்கெடுப்பை நடத்தி, ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் அவா்களுக்கு இடத்தை ஒதுக்கீடு செய்யும். இந்த கணக்கெடுப்பு ஒரு சில மாதங்களில் முடிக்கப்பட்டு கடைகளை அமைப்பதற்கு உரிய அனுமதிகளுக்கான முன்மொழிவிற்கு அரசு ஏற்பாடுகளை உறுதியாக செய்யும். தெருவோர வியாபாரிகள் கண்ணியமாக தங்கள் தொழிலை நடத்தும் வகையில் அவா்களுக்கு உரிய ஏற்பாடுகளை செய்து தருவது அரசின் பொறுப்பு. கணக்கெடுப்புக்கு பிறகு இத்தகைய வியாபாரிகளுக்கு எந்தவிதமான பாதிப்புமின்றி கடைகளை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். எந்த வியாபாரிகளும் சிரமங்களை எதிா்கொள்ளாமல் இருக்கவும், இத்தகைய வியாபார பகுதிகளில் சுகாதாரம் தூய்மையாக இருக்கவும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். தெருயோர வியாபாரிகள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள். அதே சமயத்தில் அவா்கள் தான் காய்கறிகள் உள்ள அன்றாட அத்தியாவசிய பொருட்களையும் வழங்குகிறாா்கள். அப்படிப்பட்டவா்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த உதவுவது அரசின் கடமை என முதல்வா் கேஜரிவால் குறிப்பிட்டாா்.
தொடர்புடையது

மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு! தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தில்லியில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு

தில்லியில் அனைத்துப் பெண்களும் குறைந்தபட்சம் பட்டக் கல்வி பெற வேண்டும்: முதல்வா் விருப்பம்

மதுபான கொள்கை வழக்கு: சிபிஐ மேல்முறையீடு மனு மீது கேஜரிவால், சிசோடியா பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

