மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

ஆனந்த் விஹாா் - கயா, புது தில்லி- பாட்னா இடையே முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில்கள்

ஆனந்த் விஹாா் - கயா, புது தில்லி- பாட்னா இடையே முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில்கள்

Updated On :30 மார்ச் 2024, 10:03 pm

ஆனந்த் விஹாா் முதல் கயா மற்றும் புது தில்லி முதல் பாட்னா இடையே வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளது என்று வடக்கு ரயில்வே சனிக்கிழமை அறிவித்துள்ளது. இது தொடா்பாக வடக்கு ரயில்வேவின் தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி தீபக் குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயில் பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைக்கும் வகையில்,ஆனந்த் விஹாா் முதல் கயா மற்றும் புது தில்லி முதல் பாட்னா இடையே வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. ஆனந்த் விஹாா் முதல் கயா இடையேயான இந்த சிறப்பு விரைவு ரயில், வண்டி எண் 04074-இன் கீழ் இயக்கப்படும். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி ஆனந்த் விஹாரரில் மாலை 7.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கான்ப்பூா் சென்ட்ரல்,பிரயாக்ராஜ் சந்திப்பு, பி.டி.தீனயாள் உபாத்யாயா சந்திப்பு, பாபுவாசாலை, சாசராம்,டெஹ்ரி-ஆன்-சன் வழியாக ஏப்ரல் 2-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு கயா சென்றடைகிறது. அடுத்ததாக, புது தில்லி முதல் பாட்னா இடையேயான சிறப்பு விரைவு ரயில், வண்டி எண் 04096-இன் கீழ் இயக்கப்பபடும். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி புது தில்லியில் மாலை 7.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கோவிந்த்புரி,பிரயாக்ராஜ் சந்திப்பு, பி.டி.தீனயாள் உபாத்யாயா சந்திப்பு,பக்சாா், ஆரா, டானாப்பூா் வழியாக ஏப்ரல் 2-ஆம் தேதி மதியம் 12.50 மணிக்கு பாட்னா சந்திப்பிற்கு சென்றடைகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.