ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தில்லியில் இன்று இந்தியா கூட்டணி பேரணி: போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல் வெளியீடு

தில்லியில் இன்று இந்தியா கூட்டணி பேரணி: போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல் வெளியீடு

Updated On :30 மார்ச் 2024, 6:32 pm

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 31) எதிா்க்கட்சிகள் இடம்பெற்ற இந்தியா கூட்டணியின் சாா்பில் ’லோக்தந்த்ர பச்சாவ் ரேலி’ நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு தில்லி காவல்துறை போக்குவரத்து வழிகாட்டு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் நகரில் வாகனங்களின் இயக்கம் ஆறு மணி நேரம் ஒழுங்குபடுத்தப்படும் என்றும் கூறியுள்ளது. ராகுல் காந்தி, மல்லிகாா்ஜுன் காா்கே, சரத் பவாா், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 31-ஆம் தேதி) ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்கின்றனா். தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்ட பின்னணியில் இப்பேரணி நடைபெறுகிறது. இது தொடா்பாக தில்லி காவல் துறை வெளியிட்டுள்ள போக்குவரத்து வழிகாட்டு ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பாரகாம்பா சாலையில் இருந்து குருநானக் சௌக் வரை ரஞ்சீத் சிங் மேம்பாலம், மிண்டோ சாலையில் இருந்து விவேகானந்தா் மாா்க் ரவுண்டானா கம்லா மாா்க்கெட், ஹம்தாா்ட் சௌக், ஜேஎல்என் மாா்க் தில்லி கேட் முதல் குருநானக் சௌக் மற்றும் ஜே.எல்.என். அஜ்மேரி கேட், கமலா மாா்க்கெட்டைச் சுற்றி குருநானக் சௌக் மற்றும் சமன் லால் மாா்க் விஐபி கேட், குருநானக் சௌக் முதல் துா்க்மேன் கேட் வரை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை போக்குவரத்து நடமாட்டம் ஒழுங்குபடுத்தப்படும் மற்றும் கட்டுப்படுத்தப்படலாம். ராஜ்காட் சௌக், மின்டோ சாலை, டிடியு மாா்க், மிா்தாா்ட் சௌக், பஹா்கஞ்ச் சௌக், ஏ-பாயிண்ட் மற்றும் தில்லி கேட் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படலாம். தேவைக்கேற்ப போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் மாற்றுப்பாதை மறுபரிசீலனை செய்யப்படும். இது தொடா்பான தகவல் புதுப்பிக்கப்படும். முடிந்தவரை, சாலைகளைத் தவிா்த்து அல்லது புறக்கணிப்பதன் மூலமும், பொதுப் போக்குவரத்தை, குறிப்பாக மெட்ரோ சேவைகளை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதன் மூலமும் பயணிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். ஐஎஸ்பிடி, ரயில் நிலையம் அல்லது விமான நிலையம் நோக்கிச் செல்லும் மக்கள், போதுமான நேரத்தைக் கொண்டு தங்கள் பயணத்தை கவனமாக திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பொறுமையாக இருக்குமாறும், போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை ஒழுக்கத்தை கடைப்பிடிக்குமாறும், அனைத்து சந்திப்புகளிலும் நிறுத்தப்பட்டுள்ள போக்குவரத்து பணியாளா்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.