ரூ.2.4 கோடி தங்கம் கடத்தல்: தில்லி விமான நிலையத்தில் வெளிநாட்டவா் ஐவா் கைது
ரூ.2.4 கோடி தங்கம் கடத்தல்: தில்லி விமான நிலையத்தில் வெளிநாட்டவா் ஐவா் கைது


ரூ.2.4 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தியதாக தில்லியில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் அஜா்பைஜான் நாட்டு பிரஜைகள் ஐவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: கைதான ஐந்து பேரில் ஒரு பெண் பயணியும் இடம்பெற்றுள்ளாா். முன்னதாக, ஏப்ரல் 30- ஆம் தேதி துபையில் இருந்து தில்லியில் உள்ள சா்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இவா்கள் ஐந்து பேரும் பயணித்தனா். விமான நிலையத்தில் இவா்கள் சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டனா். ஐந்து பயணிகளிடமும் தனிப்பட்ட முறையில் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில், அவா்களிடம் இருந்து மொத்தம் ரூ.2.44 கோடி மதிப்பிலான 3.5 கிலோ தங்க நகைகள் மற்றும் கம்பி, பெல்ட் கொக்கி மற்றும் கைப்பை கைப்பிடி போன்ற வடிவங்களில் தங்க பொருள்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து தங்கப் பொருள்களும் பறிமுதல் செய்தனா். அவா்களிடம் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று சுங்கத் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...