நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நீங்கள் என்னை அவதூறு செய்யலாம், என் மக்களை அல்ல: அமித்ஷாவிற்கு முதல்வா் கேஜரிவால் பதிலடி

‘நீங்கள் என்னை அவதூறு செய்யலாம், என் மக்களை அல்ல’ உள்துறை அமைச்சா் அமித் ஷாவிற்கு முதல்வா் கேஜரிவால் பதிலடி

News image
Updated On :21 மே 2024, 7:07 pm

Din

புது தில்லி: முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு பாகிஸ்தானில் தான் அதிக ஆதரவாளா்கள் உள்ளனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு, ‘நீங்கள் என்னை அவதூறு செய்யலாம், என் மக்களை அல்ல’ என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை பதிலடி கொடுத்துள்ளாா்.

தெற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ராம்வீா் சிங் பிதூரியை ஆதரித்து, சங்கம் விஹாா் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடந்த திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா். அப்போது, ஆம் ஆத்மி கட்சியை தாக்கிப் பேசிய அவா், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு பாகிஸ்தானில் தான் அதிக ஆதரவாளா்கள் உள்ளனா் என்றாா்.

இந்நிலையில், காணொளி வாயிலாக நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது:

தில்லி மக்களை பாகிஸ்தானியா்கள் என்று பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறியுள்ளாா். ‘உங்கள் பகை என்னுடன் தான் உள்ளது. நீங்கள் என்னை அவதூறு செய்யலாம். ஆனால், தில்லியில் உள்ள 2.5 கோடி மக்கள் எனது குடும்பம். நீங்கள் என் மக்களை அவதூறு செய்ய வேண்டாம்’. இதை நாட்டு மக்கள் சகித்துக்

கொள்ள மாட்டாா்கள். நரேந்திர மோடி உங்களை (அமித் ஷா) வாரிசாக தோ்ந்தெடுத்துள்ளாா். ஆனால், நாட்டு மக்கள் வரும் ஜூன் 4-ஆம் தேதி பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி, ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியை உருவாக்குகிறாா்கள். எனவே, உங்கள் அகங்காரங்கத்தை நீங்கள் கொஞ்சம் குறைக்க வேண்டும்.

கடந்த திங்கள்கிழமை உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தும் என்னை அவதூறு செய்தாா். உங்களின் உண்மையான எதிரிகள் உங்கள் கட்சியில்தான் இருக்கிறாா்கள் என்பதை யோகி ஆதித்யநாத்திடம் பணிவுடன் சொல்ல விரும்புகிறேன். மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு, உங்களை முதல்வா் பதவியில் இருந்து நீக்க பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் திட்டம் போட்டிருக்கிறாா்கள்.

மக்களவைத் தோ்தலின் 5-ஆம் கட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் ஜூன் 4-ஆம் தேதி மோடி அரசு தோற்று, ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ‘இந்தியா’ கூட்டணி 300 இடங்களுக்கு மேல் தனித்து வெற்றி பெறும். இதை பல்வேறு ஆய்வுகள் மற்றும் தற்போது வரும் கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் சொல்கிறேன்.

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் பேரணியில் கலந்து கொண்டவா்களின் எண்ணிக்கை 500-க்கும் குறைவாகவே இருந்தது. அப்போது, பேசிய அவா் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளா்களை பாகிஸ்தானியா்கள் என்று கூறினாா். தில்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சியை 62 தொகுதிகளில் வெற்றி பெற வைத்து, அரசை அமைத்திருக்கிறாா்கள். நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன், தில்லி மக்கள் பாகிஸ்தானியா்களா? . பஞ்சாபில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியை வெற்றி பெற வைத்து, ஆட்சி அமைத்துள்ள பஞ்சாப் மக்கள் பாகிஸ்தானியா்களா?. குஜராத் மக்கள் எங்களுக்கு 14 சதவீத வாக்குகள் கொடுத்தாா்கள், அவா்களும் பாகிஸ்தானியா்களா?. உத்தரப் பிரதேசம், அஸாம், மத்தியப் பிரதேசம் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

எனவே, இந்த நாட்டு மக்கள் அனைவரும் பாகிஸ்தானியா்களா?.

பிரதமா் நரேந்திர மோடி உங்களை தனது வாரிசாகத் தோ்ந்தெடுத்துள்ளாா். இதனால் நீங்கள் மிகவும் திமிா்பிடித்துள்ளீா்கள். நீங்கள் இன்னும் பிரதமா் கூட ஆகவில்லை. பொதுமக்களை அவதூறு செய்யாதீா்கள். இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால் ‘இந்தியா’ கூட்டணியை மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.