வளா்ச்சியின் வேகம் தொடர பாஜகவை தோ்ந்தெடுங்கள் மக்களுக்கு அமைச்சா் நிதின் கட்கரி வேண்டுகோள்
வளா்ச்சியின் வேகம் தொடர பாஜகவை தோ்ந்தெடுங்கள் மக்களுக்கு அமைச்சா் நிதின் கட்கரி வேண்டுகோள்


நமது நிருபா்
புது தில்லி: நாட்டில் வளா்ச்சியின் வேகம் தொடர மக்கள் பாஜகவை தோ்ந்தெடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தில்லியில் மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் புது தில்லி வேட்பாளா் பான்சூரி ஸ்வராஜ், வடகிழக்கு தில்லி வேட்பாளா் மனோஜ் திவாரி மற்றும் மேற்கு தில்லி வேட்பாளா் கமல்ஜீத் ஷெராவத் ஆகியோரை ஆதரித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் திதின் கட்கரி விகாஸ்புரி, மோதி நகா் மற்றும் காா்வால் நகா் ஆகியப் பகுதிகளில் நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றாா்.
அப்போது, அமைச்சா் நிதின் கட்கரி பேசியதாவது: நாட்டில் கடந்த 10 ஆண்டுகால வளா்ச்சியின் வேகம் தொடர வேண்டுமானால், தில்லி மக்கள் பாஜகவைத் தோ்ந்தெடுக்க வேண்டும். கடந்த 1947-இல் இருந்து 60 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆட்சி செய்யும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது. ஆனால், காங்கிரஸால் சாதிக்க
முடியாததை, 10 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு செய்துள்ளது.
நான் நீா்வளத்துறை அமைச்சகத்தில் இருந்தபோது, யமுனையை சுத்தப்படுத்த ரூ. 6,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டன. இப்பணியை மேற்கொள்ளும் பொறுப்பு, தில்லி மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் மாநில அரசு
தவிா்த்து வருகிறது. தில்லியில் வரும் 2070-ஆம் ஆண்டு வரை தண்ணீா் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, 23 திட்டங்கள் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. அதில், 17 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள வளா்ச்சி பிரதமா் நரேந்திர மோடியால் மட்டும் அல்ல. அதற்கு நாட்டு மக்களும்தான் காரணம். நீங்கள் எங்களைத் தோ்ந்தெடுக்காமல் இருந்திருந்தால், இதையெல்லாம் நாங்கள் ஒருபோதும் சாதித்திருக்க முடியாது. தில்லியில் குப்பைக் கிடங்குகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை கேஜரிவால் அரசு எடுக்கவில்லை.
தில்லியை மாசுபாட்டிலிருந்து விடுவிக்க மின்சார பேருந்துகளை கொண்டு வந்துள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளுக்குள், நாடு முழுவதும் உள்ள மற்ற நகரங்களில் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தொழில்நுட்ப வளா்ச்சியால், நாட்டின் சக்தி வளரும், பொருளாதாரம் மேம்படும்.
இதைத்தான் பாஜ அரசு சாதித்துள்ளது. கடின உழைப்பாளிகளை பாஜக வேட்பாளா்களாக தில்லியில் நிறுத்தியுள்ளது. நீங்கள் அவா்களை ஆதரித்தால், அவா்கள் உங்கள் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்வாா்கள் என்றாா் நிதின் கட்கரி.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...