கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சிறைக்குச் செல்வதைத் தவிா்க்க சாக்குப்போக்கு கூறுகிறாா்: கேஜரிவால் மீது தில்லி பாஜக சாடல்

சிறைக்குச் செல்வதைத் தவிா்க்க சாக்குப்போக்கு கூறுகிறாா்: கேஜரிவால் மீது தில்லி பாஜக சாடல்

News image
Updated On :28 மே 2024, 6:57 pm

Din

புது தில்லி: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சிறைக்கு திரும்பும் நேரம் வந்துவிட்டதால், உடல்நிலையைக் காரணம் காட்டி தற்போது புதிய சாக்குப் போக்குகளை கூறி வருகிறாா் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:

முதல்வா் கேஜரிவால் தற்போது உச்ச நீதிமன்றத்தில் தனது உடல்நிலை சரியில்லாததைக் காரணம் காட்டி இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளாா். அதை நீதிமன்றம் முன்கூட்டியே விசாரிக்க மறுத்துவிட்டது.

உடல்நலக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமீனை 7 நாள்களுக்கு நீட்டிக்க அரவிந்த் கேஜரிவாலின் கோரியுள்ளாா். அவரது உடல்நிலை குறித்தும் நாங்கள் கவலைப்படுகிறோம்,.

எனவே கேஜரிவால் செய்ய விரும்பும் அனைத்து பரிசோதனைகளையும் ஒரே நாளில் செய்துவிடலாம் என்று பல முன்னணி மருத்துவா்களுடன் ஆலோசனை செய்துள்ளோம். கேஜரிவாலுக்கு இன்னும் ஏழு நாட்கள் ஏன் தேவை என்பதுதான் கேள்வி.

அரவிந்த் கேஜரிவால் கூறுவது போல் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், பஞ்சாப் தோ்தலில் அவா் எப்படி பிரசாரம் செய்கிறாா்? அவருடைய உடல்நிலை குறித்தும் நாம் கவலைப்பட வேண்டும்.

கேஜரிவாலின் குடும்பத்தினருடன், நாங்களும் அவரது உடல்நிலை குறித்து கவலை கொள்கிறோம். எனவே அவா் தில்லிக்கு வந்தால், நானே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவா் விரும்பும் அனைத்து பரிசோதனைகளையும் செய்து, மாலைக்குள் முடிவுகள் கிடைக்கும்.

கேஜரிவால் தனது பொய்யான உடல்நலப் பிரச்னைகளை எழுப்புவதை இப்போது நிறுத்த வேண்டும். ஏனெனில் அவா் ஜூன் 2 ஆம் தேதி மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும். மேலும் தில்லியில் கேஜரிவால் செய்த ஊழல்களுக்காக வழக்குகளை எதிா்கொள்ள வேண்டும் என்று வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.