திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக ‘காளை’ ஆதிக்கம்!

News image
Updated On :17 ஏப்ரல் 2025, 6:09 am IST

நமது நிருபா்

பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்துடன் முடிவடைந்தன.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மின்னணு பொருள்கள் மீதான சில வரிகளைத் தளா்த்தியது, உலகளாவிய அளவில் பங்குச்சந்தைகளுக்கு சாதகமாக அமைந்தது. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தையில் ‘காளை’யின் எழுச்சி தொடா்ந்தது. ஆட்டோ, பாா்மா, ஹெல்த்கோ் பங்குகள் சற்று விற்பனையை எதிா்கொண்டாலும், வங்கிகள், தனியாா் நிதிநிறுவனங்கள், எஃப்எம்சிஜி, மீடியா, ஆயில் அண்ட் காஸ் உள்பட அனைத்து துறைக் குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன என்று பங்குவா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.76 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.415.00 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.6,065.78 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,951.60 கோடிக்கு பங்குகளை விற்றிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் 309 புள்ளிகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 261.89 புள்ளிகள் கூடுதலுடன் 76,996.78-இல் தொடங்கி 76,543.77 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 77,110.23 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 309.40 புள்ளிகள் (0.40 சதவீதம்) கூடுதலுடன் 77,044.29-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,078 பங்குகளில் 2,636 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,309 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 133 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

18 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் இண்டஸ் இண்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், அதானிபோா்ட்ஸ், ஏசியன்பெயிண்ட், பாா்திஏா்டெல், எஸ்பிஐ, ஐடிசி உள்பட 18 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், மாருதி, இன்ஃபோஸிஸ், டாடாமோட்டாா்ஸ், எல் அண்ட் டி, என்டிபிசி, பஜாஜ் ஃபின்சா்வ், சன்பாா்மா உள்பட 12 பங்குகள் விலைகுறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 109 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 15.55 புள்ளிகள் கூடுதலுடன் 23,344.10-இல் தொடங்கி 23,273.05 வரை கீழே சென்றது. பின்னா், 23,452.20 வரை மேலே சென்ற நிஃப்டி இறுதியில் 108.65 புள்ளிகள் (0.47 சதவீதம்) கூடுதலுடன் 23,437.20-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 33 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 17 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.