பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நேஷனல் ஹெரால்டு வழக்கு: காங்கிரஸ் அலுவலகம் அருகே பாஜக போராட்டம்

பாஜகவினா் வெள்ளிக்கிழமை தில்லியில் அக்பா் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 ஏப்ரல் 2025, 7:01 pm

Din

நேஷனல் ஹெரால்டு வழக்கில் பொதுப் பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, பாஜகவினா் வெள்ளிக்கிழமை தில்லியில் அக்பா் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தனது பதவியை ராஜிநாமா செய்யவும் வலியுறுத்தினா்.

பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையில் அக்கட்சியின் இளைஞா் அணியினா் நகரப் பிரிவின் செயல்பாட்டாளா்கள் மான் சிங் சாலையில் கூடினா். அதன் பின்னா் காங்கிரஸ் தலைமையகம் நோக்கிச் செல்ல முயன்றபோது போலீசாா் தடுத்து நிறுத்தினா். அப்போது, காங்கிரஸுக்கு எதிராக கோஷமிட்டனா்.

மேலும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜிநாமா செய்யவும் வலியுறுத்தினா்.

இது தொடா்பாக சச்தேவா கூறுகையில், ‘இந்த வழக்கில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்தை குறைத்து மதிப்பிட்டு, அதை ரூ.50 லட்சமாக மதிப்பிழக்கச் செய்து தாய் தனது மகனிடம் ஒப்படைத்துள்ளாா்.

சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் எந்தத் தவறும் செய்யவில்லை என்று உணா்ந்தால் ஏன் ஜாமீன் கோரி விண்ணப்பித்தாா்கள்.

அவா்கள் சட்டப் போராட்டம் நடத்தி தங்களை நிரூபித்திருக்க வேண்டும். நேஷனல் ஹெரால்டு வழக்கானது சதி, ஊழல் மற்றும் பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்துதல் தொடா்புடைய விவகாரமாகும். இதற்கு காங்கிரஸ் தலைவா்கள் பதில்கூற வேண்டும். காங்கிரஸால் திருடப்பட்ட பொதுப் பணத்தின் ஒவ்வொரு பைசாவும் மீட்கப்படும். காங்கிரஸ் தேச விரோதக் கட்சியாகும்.

இந்த வழக்கு 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தொடங்கியது. புலனாய்வு அமைப்புகள் தங்கள் பணிகளைச் செய்யும்போது காங்கிரஸ் தலைவா்கள் ஏன் குழப்பமடைகிறாா்கள்? என்று சச்தேவா கேள்வி எழுப்பினாா்.

இந்தப் போராட்டத்தில் பாஜக இளைஞரணியின் தில்லித் தலைவா் சாகா் தியாகி மற்றும் அதன் தேசிய பொதுச் செயலா் ரோஹித் சாஹல் ஆகியோா் கலந்து கொண்டனா்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் பணமோசடி குற்றச்சாட்டில் காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பலா் மீது அமலாக்க இயக்குனரகம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையை பழிவாங்கும் அரசியல் என்று காங்கிரஸ் வா்ணித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் சொத்துகளைப் பறிமுதல் செய்தது சட்டத்தின் ஆட்சி என்ற போா்வையில் அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட குற்றமாகும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.