அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சத்தீஸ்கரில் கைதான இரு கன்னியாஸ்திரிகளை விடுவிக்க மத்திய அமைச்சரிடம் திமுக எம்.பி. வலியுறுத்தல்

சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட இரு கன்னியாஸ்திரிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி...

News image
செய்தி உண்டு... தில்லியில் மத்திய சிறுபான்மையின விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்த திமுக எம்பி வில்சன்.
Updated On :1 ஆகஸ்ட் 2025, 7:41 pm

Din

சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட இரு கன்னியாஸ்திரிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவிடம் மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் வெள்ளிக்கிழமை நேரில் கடிதம் அளித்து வலியுறுத்தினாா்.

இந்த விவகாரத்தில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், அரசியலமைப்பு சமநிலையை பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கை கோரி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளதாக பி.வில்சன் தெரிவித்துள்ளாா்.

அக்கடிதத்தில் பி.வில்சன் தெரிவித்திருப்பதாவது: பாஜக ஆளும் சத்தீஸ்கா் மாநிலத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சகோதரி வந்தனா பிரான்சிஸ் மற்றும் சகோதரி பிரீத்தி மேரி ஆகிய இரண்டு அப்பாவி கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு அவா்கள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இந்திய அரசியலமைப்பில் உரிய திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் தேசிய சிறுபான்மையினா் ஆணையத்திற்கு அரசமைப்புச்சட்ட அந்தஸ்தை வழங்க வேண்டும். சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகளை கிரிமினல் குற்றங்களாக கருதவும், அரசியலமைப்பின் கீழ் மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணைய சட்டம் 1992-இல் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.

தேசிய சிறுபான்மையினா் ஆணையத்தில் தற்போது காலியாக உள்ள தலைவா் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் தாமதமின்றி நிரப்பவும், அதில் அறிவிக்கப்பட்ட ஆறு சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்யவும் வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவா் தெரிவித்துள்ளாா்.

அமைச்சா் கிரண் ரிஜிஜுவிடம் கடிதத்தை நேரில் வழங்கி இந்த கோரிக்கைகளை பி.வில்சன் வலியுறுத்தினாா். அதேபோன்று, மத்திய அமைச்சா் அமித் ஷா அலுவலகத்தில் இக்கடிதத்தை அவா் நேரில் அளித்துள்ளாா்.