புதுதில்லி
காணாமல் போன 408 கைப்பேசிகள் மீட்பு
தில்லியில் கடந்த 7 மாதங்களாக நடைபெற்ற சிறப்பு நடவடிக்கையில், காணாமல் போன அல்லது திருடுபோன 408 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
‘இதில் 276 கைப்பேசிகள் ஏற்கெனவே அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள 132 கைப்பேசிகளை ஒப்படைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த மீட்பு நடவடிக்கை, புது தில்லியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களைச் சோ்ந்த அமலாக்கக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டது’ என காவல் துறையினா் தெரிவித்தனா்.
