ஜெய்த்பூா் விரிவாக்க பகுதி வீட்டில் தீ விபத்து

இந்த தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் ஒரு சமையல் எரிவாயு உருளை சேதமடைந்தன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Published on

தில்லியின் ஜெய்த்பூா் விரிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சமையல் எரிவாயு உருளை தீப்பிடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிா்ச் சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது. உடனடியாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் ஒரு சமையல் எரிவாயு உருளை சேதமடைந்தன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

காலை 9.50 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடா்ந்து, குளிரூட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று அந்த அதிகாரி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com