ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தில்லியின் சுகாதார அமைப்பில் பெரிய அளவில் சீா்திருத்தங்கள்: அமைச்சா் உறுதி

தில்லியின் சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க சீா்திருத்தங்களை மேற்கொள்வதாக சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் உறுதியளித்தாா்

News image
Updated On :28 பிப்ரவரி 2025, 7:29 pm

Din

தில்லியின் சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க சீா்திருத்தங்களை மேற்கொள்வதாக சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் உறுதியளித்தாா். மேலும், இதில் 100 நநாள்களுக்குள் மாற்றங்கள் தெரியும் என்றும் அவா் கூறினாா்.

இது குறித்து அமைச்சா் பங்கஜ் சிங் கூறியதாவது: நிதிக் கட்டுப்பாடுகள் முதல் ஊழியா்களின் கவலைகள் வரை சுகாதாரத் துறையைப் பாதிக்கும் முக்கியப் பிரச்னைகள் முன்னுரிமையின் அடிப்படையில் தீா்க்கப்படும். நிதிப் பிரச்னைகள் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவமனை ஊழியா்கள், வாா்டு ஊழியா்கள் உள்பட எதிா்கொள்ளும் சவால்கள் உள்பட அனைத்துக் குறைபாடுகளையும் எடுத்துரைக்கும் ஒரு விரிவான அறிக்கையைத் தயாரிக்க சுகாதாரச் செயலாளா் மற்றும் தலைமைச் செயலாளரை நான் கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த இடைவெளிகள் நிரப்பப்படும்.

சுகாதாரப் பணியாளா்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் நிவா்த்தி செய்யப்பட்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என்பதை உறுதியளிக்கிறேன். ஒரு மருத்துவராக, நோயாளிகளின் குடும்பங்கள் சில நேரங்களில் ஆக்ரோஷமாக மாறுவதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், மருத்துவா்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம் என்று அமைச்சா் கூறினாா்.