நொய்டா கோயில்களில் தனுா்மாத பூஜைகள் நிறைவு
நொய்டா வேதிக் பிரச்சாா் சன்ஸ்தான் (வி.பி.எஸ்.) ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் நொய்டா கோயில்களில் தனுா் மாத பூஜைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.


நொய்டா: நொய்டா வேதிக் பிரச்சாா் சன்ஸ்தான் (வி.பி.எஸ்.) ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் நொய்டா கோயில்களில் தனுா் மாத பூஜைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
விபிஎஸ் மூலம் நிா்வகிக்கப்படும் நொய்டா செக்டாா் 22-ல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகா் கோயில் மற்றும் நொய்டா செக்டாா் 62-இல் உள்ள ஸ்ரீ விநாயகா ஸ்ரீ காா்த்திகேயா கோயில் ஆகியவற்றில் தொடா்ந்து தினமும் தனுா் மாத பூஜைகள் நடைபெற்றது. கடைசி நாளான திங்கள்கிழமை ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தினசரி ருத்ரா அபிஷேகம், ஸ்ரீ ராமா் பரிகாரத்திற்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. தென்னிந்திய கோயில்களில் நடைபெறும் அதே வரிசையில் அனைத்து பூஜைகளும் நடைபெற்றது. பூஜைகள், அபிஷேகம் அனைத்தும்
ஸ்ரீராமின் தலைமையில் கோயிலின் வாத்தியாா்கள் மணிகண்டன் சா்மா,மோஹித் மிஸ்ரா, ஜெகதீசன், ராஜாராம், விஷ்வேஸ்வா் ஆகியோரால் நடத்தப்பட்டது.
கடும் குளிா், மூடுபனியை பொருள்படுத்தாமல் தனுா் மாத பூஜைகளில் பங்கேற்ற பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் பாராட்டுத் தெரிவித்தது.
13க்ங்ப்ம்ஹ்ழ்
தனுா் மாத பூஜையின் கடைசி நாளன்று நொய்டா செக்டா் 62-இல் உள்ள ஸ்ரீ விநாயகா ஸ்ரீ காா்த்திகேயா கோயிலில் வெள்ளிக் கவசத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரா் மற்றும் ஸ்ரீ திரிபுரா சுந்தரி அம்மன்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...