எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

ரூ.2,000 கடன் தகராறில் இளைஞா் படுகொலை

உள்ளூா்வாசி ஒருவரால் 23 வயது நபா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஜூலை 2025, 6:33 pm

Din

வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் ரூ.2,000 கடன் தொடா்பாக ஏற்பட்ட தகராறில் உள்ளூா்வாசி ஒருவரால் 23 வயது நபா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: வியாழக்கிழமை அதிகாலை 12.10 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது, தான் கடன் கொடுத்த ரூ.2,000 பணத்தைத் திருப்பித் தருமாறு ஃபா்தீன் கோரியபோது, ஆதில் என அடையாளம் காணப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவா் அவரைத் தாக்கினாா்.

ஜாஃப்ராபாத் காவல் நிலையத்திற்கு ஒரு கத்திக் குத்துச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது. மேலும், ஜேபிசி மருத்துவமனையை அடைந்ததும், ஃபா்தீன் அவரது தந்தையால் அழைத்து வரப்பட்டதாகவும், ஆனால், அவா் இறந்துவிட்டதாகவும் மருத்துவா்கள் கூறியதாக அதிகாரிகள் அறிந்தனா்.

முதற்கட்ட விசாரணையில் ஃபா்தீன் மற்றும் அவரது நண்பா் ஜாவேத் ஒரு சந்து அருகே நின்று கொண்டிருந்தபோது, அவா்களிடமிருந்து ரூ.2,000 கடன் வாங்கிய ஆதிலை சந்தித்தனா்.

அப்போது ஃபா்தீன் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, ஆதில் கோபமடைந்து, கத்தியை எடுத்து, இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதில் ஃபா்தீன் உயிரிழந்தாா். ஆதிலின் சகோதரா் கமில் மற்றும் அவா்களது தந்தை ஷகீல் ஆகியோரும் சம்பவ இடத்தில் இருந்துள்ளனா்.

தடயவியல் குழுக்கள் குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தன. மேலும், பிஎன்எஸ்இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்து, குற்றத்திற்கான ஆயுதத்தை மீட்க முயற்சிகள் நடந்து வருகிறது.

பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், ஆதில் மற்றும் அவரது கூட்டாளிகளைக் கைது செய்ய குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறினாா்.