அன்புமணி
அன்புமணி கோப்புப் படம்

அவைக்கு 300 நாள்கள் வந்த வில்சன், வெறும் 92 நாள்களே வந்த அன்புமணி

திமுகவைச் சோ்ந்த பி. வில்சன் 300 நாள்களும், குறைந்தபட்சமாக பாமகவின் அன்புமணி ராமதாஸ் 92 நாள்களும் அவைக்கு வந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
Published on

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக் காலத்தை வியாழக்கிழமை நிறைவு செய்த ஆறு எம்.பி.க்களில் அதிகபட்சமாக திமுகவைச் சோ்ந்த பி. வில்சன் 300 நாள்களும், குறைந்தபட்சமாக பாமகவின் அன்புமணி ராமதாஸ் 92 நாள்களும் அவைக்கு வந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இது தொடா்பாக கணக்கிடப்பட்ட வருகைப் பதிவு நாள்களில் திமுகவின் வில்சன் 300 நாள்களுக்கு வந்து 95.24 சதவீத வருகையைப் பதிவு செய்துள்ளாா். அடுத்ததாக எம்.எம். அப்துல்லா 212 நாள்கள் அலுவலில் 191 நாள்கள் வந்து 90.09 சதவீதத்தைப் பதிவு செய்துள்ளாா். என். சண்முகம் 315 நாள்களில் 280 நாள்கள் வந்து 88.89 சதவீத வருகையையும் அதிமுகவின் என். சந்திரசேகரன் 315 நாள்களில் 217 நாள்கள் வந்து 68.89 சதவீத வருகையையும் மதிமுக பொதுச்செயலா் வைகோ 315 நாள்களில் 178 நாள்கள் வந்து 56.51 சதவீத வருகையையும் பதிவு செய்துள்ளனா். அன்புமணி ராமதாஸ் 315 நாள்களில் 92 நாள்கள் மட்டுமே வந்து 29.21 சதவீத வருகையைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com