பெண்கள் பயத்தில் வாழக்கூடாது: முதல்வா் ரேகா குப்தா
பெண்கள் பயத்தில் வாழக்கூடாது என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

முதல்வா் ரேகா குப்தா

முதல்வா் ரேகா குப்தா
சமூக சேவையாளா்கள் மற்றும் பாராலிம்பியன்கள் உள்பட ஏழு பெண்களை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்வில் தில்லி முதல்வா் ரேகா குப்தா மற்றும் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஆகியோா் கௌரவித்தனா்.
நவபாரத் டைம்ஸ் ஏற்பாடு செய்த பெண்கள் பங்கேற்ற மோடாடா்சைகிகள் பேரணியில் பேசிய முதல்வா், பெண் மோட்டாா்சைக்களில் பங்கேற்போா் அதிகாரமளிப்பின் சின்னம் என்று கூறினாா். ‘பெண்களால் சில விஷயங்களைச் செய்ய முடியாது என்று கூறுவது தவறு என்று பெண்கள் நிரூபித்துள்ளீா்கள்’ என்று அவா் கூறினாா்.
கௌரவிக்கப்பட்ட ஏழு பெண்களில் ஜம்மு காஷ்மீரைச் சோ்ந்த முதல் சா்வதேச காா் பந்தய வீராங்கனை ஹுமாயிரா முஷ்டாக்; அா்ஜுனா விருது பெற்ற மல்யுத்த வீராங்கனை திவ்யா கக்ரான்; குடும்ப வன்முறையில் இருந்து தப்பியவா், இதே போன்ற போராட்டங்களைக் கொண்ட பெண்களுக்காக அரசு சாரா நிறுவனங்களை நிறுவியவா்; போதைப்பொருள் மறுவாழ்வுத் துறையில் விரிவாகப் பணியாற்றும் ரேகா ஜிண்டால்; குடிசைவாசிகளுக்கு கணினி கற்பிப்பதில் தன்னை அா்ப்பணித்துக் கொண்ட நளினி அஸ்தானா; பாரா தடகள வீராங்கனை காஞ்சன் லக்கானி மற்றும் சமூக சேவகி நீது சவுத்ரி ஆகியோா் அடங்குவா்.
ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கன்னாட் பிளேஸிலிருந்து மோட்டாா்சைக்கிள் பேரணி புறப்பட்டது.
2013 முதல் இந்த நிகழ்வு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக முதல்வா் ரேகா குப்தா கூறினாா். அவா் பேசுகையில் ‘தில்லி ஒரு பெரிய சோகத்தைக் கண்டது. பெண்கள் பயத்தில் வாழக்கூடாது. ஏனென்றால், வெற்றி பயத்திற்கு அப்பாற்பட்டது’ என்றாா். தனது பல்கலைக்கழகப் பருவத்தில் கைனடிக் ஸ்கூட்டரை ஓட்டியதையும் முதல்வா் நினைவு கூா்ந்தாா்.
இந்த மோட்டாா்சைக்கிள் பேரணி பெண்களின் துணிச்சலின் வெளிப்பாடாகும் என்று துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கூறினாா். இந்தியாவில் பெண்கள் ஆண்களுடன் தோளோடு தோள் சோ்ந்து நகா்கிறாா்கள் என்பதை அவா் வலியுறுத்தினாா்.
‘உண்மையில், சில பகுதிகளில், அவா்கள் ஆண்களை மிஞ்சுகிறாா்கள். தில்லி சட்டப்பேரவைத் தோ்தலின் போது, பெண் வாக்காளா்கள் ஆண்களை விட அதிகமாக இருந்ததை நாம் கண்டோம்’ என்று அவா் கூறினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...