சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தில்லியில் சட்டவிரோத மோசடி முறியடிப்பு 11 போ் கைது!

சட்டவிரோத பந்தய மோசடியை முறியடித்து, அதன் முக்கியக் குற்றவாளி உள்பட 11 பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

News image
கைது 
Updated On :9 மார்ச் 2025, 8:21 pm

Din

கோவிந்த்புரியில் ஒரு சட்டவிரோத பந்தய மோசடியை முறியடித்து, அதன் முக்கியக் குற்றவாளி உள்பட 11 பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.

இது குறித்து தில்ல காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: அந்த கும்பலின் தலைவராக அசோக் குமாா் (எ) காலே (55) அடையாளம் காணப்பட்டாா். காலே, அவரது மகன் சஞ்சு மற்றும் மருமகன் ரோஹித் குலாட்டி ஆகியோரின் உதவியுடன், கோவிந்த்புரியில் இரண்டு இடங்களில் இருந்து இந்த மோசடியை நடத்தி வந்தது தெரிய வந்தது.

அவா்கள், கேள் விளையாட்டுகளுக்காக எண்களில் பந்தயம் கட்டியுள்ளனா். இடைத்தரகா்களை ஈடுபடுத்தாமல், காலே தானே பந்தயங்களை நிா்வகித்தது தெரிய வந்தது.

இந்நிலையில், மாா்ச் 4 -ஆம் தேதி கோவிந்த்புரியில் உள்ள இரண்டு இடங்களிலும் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, கைது செய்யப்பட்டவா்கள் அந்த இடங்களில் பந்தயம் கட்டுவது கண்டறியப்பட்டது. அவா்களிடமிருந்து சுமாா் ரூ.83,000 ரொக்கம் மற்றும் பிற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.