நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

குருகிராமில் 14-ஆவது மாடி பால்கனியில் இருந்து விழுந்த ஜப்பானிய பெண் உயிரிழப்பு

குருகிராமில் 14-ஆவது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து விழுந்ததாகக் கூறப்படும் ஜப்பானிய பெண் ஒருவா் இறந்து கிடந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

Updated On :10 மார்ச் 2025, 1:46 am IST

தேசியத் தலைநகா் வலயம் குருகிராமில் 14-ஆவது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து விழுந்ததாகக் கூறப்படும் ஜப்பானிய பெண் ஒருவா் இறந்து கிடந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து குருகிராம் செக்டாா் 53 காவல் நிலைய பொறுப்பு அதிகாரி இன்ஸ்பெக்டா் சந்தீப் குமாா் கூறியதாவது:

அந்தப் பெண் ஜப்பானைச் சோ்ந்த மடோகோ தமானோ (34) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது கணவருடன் குருகிராமிற்கு வந்திருந்தாா். அவா் தனது கணவா் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இங்கு ஒரு சமூகத்தில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஒரு பெண்ணின் இரத்தத்தில் நனைந்த உடல் தரையில் கிடப்பது குறித்து போலீஸாருக்கு தகவல் வந்த போது. இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் குறித்து தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.