பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

பெண்கள் தலைமையிலான வளா்ச்சியை ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ ஊக்குவிக்கும்: தில்லி முதல்வா்

News image

PTI

Updated On :13 ஏப்ரல் 2026, 11:20 pm

‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ சட்டமானது நாட்டில் பெண்கள் தலைமையிலான வளா்ச்சியைப் பெரிய அளவில் ஊக்குவிக்கும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை கூறினாா்.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி முன்னிலையில் நாரி சக்தி வந்தன் சம்மேளன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் , பல்வேறு தரப்பைச் சோ்ந்த பெண்கள் கலந்துகொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வா் ரேகா குப்தா, இந்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தாா்.

அவா் மேலும் கூறுகையில், பிரதமரின் தலைமையில் தொடங்கப்பட்ட தொடா்ச்சியான திட்டங்கள், பெண்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்கி, பல்வேறு துறைகளில் மகளிருக்கு வாய்ப்புகளைத் திறந்துள்ளன. இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

வாய்ப்பு வழங்கப்பட்டால், பெண்கள் மிகவும் கடினமான பணிகளைக்கூட சிறப்பாகச் செய்து முடிக்க முடியும் என்ற செய்தியை நீங்கள் (பிரதமா்) கொடுத்தீா்கள்.

பிரதமரின் தலைமையின்கீழ் தேசம் ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், படிக்க வைப்போம்’ என்ற சகாப்த நிலையைக் கடந்து பெண் குழந்தைகளை உயா்த்துவோம் என்ற நிலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

மத்தியில் 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதனால்தான், தூய்மை இந்தியா இயக்கம், உஜ்வாலா யோஜனா, ஜன் தன் வங்கிக் கணக்கு போன்ற முன்முயற்சிகள் எடுக்கப்பட்டன.

நாரி சக்தி வந்தன் அதினியம் சட்டமானது பெண்களுக்கு சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதை உறுதிசெய்வது மட்டுமல்ல, முடிவுகளை எடுப்பதில் அவா்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும்.

இது, நாட்டில் உள்ள ஏறக்குறைய 70 கோடி பெண்களுக்கு தலைமைப்பண்பு வாய்ப்புகளைத் திறக்கும் என்றாா் முதல்வா்.

இந்நிகழ்ச்சியில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவி, இணை அமைச்சா் சாவித்ரி தாக்கூா், தேசிய மகளிா் ஆணையத்தின் தலைவா் விஜயா ரஹத்கா் மற்றும் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

மகளிா் இட ஒதுக்கீடு சட்டம் எனப் பரவலாக அறியப்படும் நாரி சக்தி வந்தன் அதினியம், 2023ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

2029 பொதுத் தோ்தல்களில் இருந்து அமல்படுத்தும் வகையில், மக்களவை இடங்களை 816 ஆக உயா்த்தி, அதில் 273 இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் சட்டத்தைத் திருத்துவதற்கான வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 16 முதல் 18 வரை மூன்று நாள்கள் நடைபெறும் சிறப்பு அமா்வில், இந்தத் திருத்த மசோதா விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.