டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

விண்ணப்பித்துவிட்டார்களா..? பெண்கள் சேவை மையத்தில் பெண்களுக்கு வேலை!

கோவை மாவட்ட சமூக நலத்துறையின்கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையத்தில் பணிகளுக்கு விண்ணப்பிப்பது குறித்து...

News image

பெண்கள் சேவை மையத்தில் பெண்களுக்கு வேலை! - கோப்புப்படம்

Updated On :30 மே 2026, 3:02 pm IST

கோவை மாவட்ட சமூக நலத்துறையின்கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையத்தில் கீழ்வரும் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்வரும் அனைத்து பணிகளுக்கும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

இது குறித்த விபரம் வருமாறு:

பணி: CaseWorker

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.18,800

தகுதி: Social Work,Sociology, Psychology, Clinical Psychology போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று பெண் களுக்கு எதிரான வன்முறை களை தடுக்கும் வகையில் செயல்படும் அரசு / அரசு சாரா நிறுவனங்களில் குறைந்தபட்சம் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: IT Staff

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.20,000

தகுதி:, ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்புடன் கம்ப்யூட் டர், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Multipurpose Helper

காலியிடங்கள்: 7

சம்பளம்: மாதம் ரூ.10,000

தகுதி: 8 ஆம் வகுப்புதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் சமையல் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Security Guard

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.12,000

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். Security பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதி யானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.coim batore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிற்க்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 30.5.2026

Summary

Jobs for Women at the Women's Service Center...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.