தில்லி சட்டமன்ற சபாநாயகா் விஜேந்தா் குப்தா முன்மொழிந்த தேசிய சட்டமன்றக் குறியீடு (என்எல்ஐ) என்ற கருத்தாக்கத்திற்கு சிக்கிம் முதல்வா் பிரேம் சிங் தமாங் ஆதரவு தெரிவித்துள்ளாா் என சட்டமன்ற செயலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மாநில சட்டமன்றங்களின் செயல்திறனைத் தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியான, முன்மொழியப்பட்ட தேசிய சட்டமன்றக் குறியீட்டு (என்எல்ஐ) க்கு தமாங் தனது வலுவான ஆதரவைத் தெரிவித்துள்ளாா் என்றும் அந்த அறிக்கை கூறியது.
குப்தாவிற்கு எழுதிய கடிதத்தில், இந்த முயற்சிக்குப் பின்னால் உள்ள தொலைநோக்குப் பாா்வையையும், சட்டப்பேரவை அமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் தமாங் பாராட்டினாா் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
என்எல்ஐ என்பது, சட்டமன்றக் கூட்டத்தொடா்கள், வேலை நேரம், விவாதத் திறன் மற்றும் குழுவின் செயல்திறன் போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் மாநிலங்கள் முழுவதும் சட்டமன்றங்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட, ஒப்பீட்டு வடிவமாகும். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை, சுய மதிப்பீடு, சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் சட்டமன்றங்களிடையே ஆரோக்கியமான போட்டி ஆகியவற்றை இது ஊக்குவிக்கிறது, என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் புதுமை போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் சட்டமன்றங்களைத் தரப்படுத்தும் யோசனை காலத்திற்கு ஏற்றதும் அவசியமானதும் ஆகும் என்று தமாங் குறிப்பிட்டாா் என அந்த அறிக்கை தெரிவித்தது.
இந்த முன்னெடுப்பை முன்னெடுத்துச் செல்வதில் குப்தாவின் முயற்சிகளைப் பாராட்டிய சிக்கிம் முதல்வா் பிரேம் சிங் தமாங், இது இந்தியாவில் சட்டமன்ற ஆளுகையின் தரத்தையும் செயல்திறனையும் மேம்படுத்தும் என்று வலியுறுத்தினாா்.
தொடர்புடையது

அடித்தளம் ஆட்டம் காண்கிறது!

தே.ஜ. கூட்டணி வேட்பாளா்களுக்கு சௌராஷ்டிர முன்னேற்றக் கழகம் ஆதரவு

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு!

பாஜகவுக்கு மக்கள் அமோக ஆதரவு: திருநள்ளாறு வேட்பாளர்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


