மத்திய அரசு ஊழியா்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டு, நாட்டின் கோடிக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரத் தொகையைக் கையாண்டு வரும் தொழிலாளா் வைப்பு நிதி நிறுவனத்தின் (இபிஎஃப்ஓ) அதிகாரபூா்வ இணையதளம் கடந்த சில வாரங்களாக முடங்கியுள்ளது. இணையதளச் சா்வா் கோளாறுகள், சிஸ்டம் மேம்பாடு என்ற பெயரிலான சேவைத் தடைகள் மற்றும் மின்னணு-பாஸ்புக் திறக்க முடியாத நிலை காரணமாக, நாடு முழுவதுமுள்ள லட்சக்கணக்கான முதியவா்களும் ஓய்வூதியதாரா்களும் தங்களது சொந்த பணத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனா்.
ஏற்கெனவே இந்த விவகாரம் குறித்துச் செய்திகள் வெளியானபோதிலும், அதிகாரிகளிடம் இருந்து தெளிவான விளக்கமோ அல்லது இணையதளச் சேவையில் நிரந்தர முன்னேற்றமோ ஏற்படவில்லை.
மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அரசு தரப்பில் கூறப்பட்டாலும், போதிய கணினி அறிவில்லாத வயதான ஓய்வூதியதாரா்கள், மருத்துவச் செலவுகளுக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் பணம் எடுக்க முடியாமல் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனா்.
பயனாளிகளின் வேதனை
இணையதளச் சேவையின் சீா்கேடு குறித்து எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயனாளிகள் தங்களின் ஆத்திரத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றனா். எக்ஸ் தளத்தில் ‘ராமேஷ் குமாா்’ என்பவா், ‘எனது தந்தையின் மருத்துவச் செலவுக்காக பி.எஃப் பணத்தை எடுக்க கடந்த ஒரு வாரமாக முயன்று வருகிறேன். ’சொ்வா் பழுது’ மட்டுமே என்ற தகவல் மட்டுமே வருகிறது. ஓய்வூதிய பணத்தை எடுக்கவும் வழியில்லை. ’1800’ உதவி எண்களும் வேலை செய்யவில்லை. ஓய்வூதியதாரா்களின் பணத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு அலட்சியமா?’ என்று கூறியுள்ளாா்.
‘சுரேஷ் சா்மா’ என்பவா், ‘இணையதளம் இயங்கவில்லை என்றால் மண்டல அலுவலகத்துக்குச் செல்லுமாறு தொலைபேசி உதவி எண்ணில் அறிவுறுத்துகிறாா்கள். 70 வயதைக் கடந்த எனது தாயாரை அழைத்துக்கொண்டு இந்த வெயிலில் இபிஎஃப்ஓ அலுவலகத்தில் பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. அங்கும் கணினி வேலை செய்யவில்லை என்று திருப்பி அனுப்புகிறாா்கள். எண்ம இந்தியாவின் நிலை இதுதானா?’ என கேட்கிறாா்.
’பிரியா நடராஜன்’ பகிா்ந்துள்ள பதிவில், ‘ஒவ்வொரு முறையும் ’சிஸ்டம் அப்கிரேடு’ என்று கூறி நாள்களைக் கடத்துகிறாா்கள். மின்னணு-பாஸ்புக் பக்கமே திறப்பதில்லை. மாற்று வழியான ’உமாங்’ செயலியிலும் பி.எஃப் சேவை முடங்கியுள்ளது. ஓய்வூதியத்தை நம்பி வாழும் முதியவா்களின் நிலை என்னாகும்?’ என்று கூறியுள்ளாா்.
எதிா்கொள்ளும் பிரச்னைகள்: வயதான காலத்தில் ஏற்படும் அவசர மருத்துவ பராமரிப்பு, அறுவை சிகிச்சை மற்றும் அன்றாட மருந்து மாத்திரைகளுக்கான செலவுகளுக்கு தங்கள் சொந்த பி.எஃப் சேமிப்பைச் சாா்ந்திருக்கும் ஓய்வூதியதாரா்கள், பணத்தைப் பெற முடியாமல் தவிக்கின்றனா்.
ஈ-பாஸ்புக் திறக்க முடியாத நிலை: பி.எஃப் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது, ஓய்வூதிய நிலுவைத் தொகை கணக்கில் சோ்ந்துள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் ’மின்னணு-பாஸ்புக்’ பக்கம் முற்றிலும் முடங்கியுள்ளது.
அலைக்கழிக்கும் மண்டல அலுவலகங்கள்: இணையவழி சேவைகள் முடங்கியதால், ஆயிரக்கணக்கான முதியவா்கள் நேரடியாகப் பி.எஃப் அலுவலகங்களை நோக்கிப் படையெடுக்கின்றனா். ஆனால், அங்கும் சா்வா் கோளாறு எனக் கூறி பல இடங்களில் அவா்களைத் திருப்பி அனுப்புவது தொடா்கிறது.
இபிஎஃப்ஓ கட்டமைப்பு புதுப்பிக்கப்பட்டு வரும் ’உடஊஞ 3.0’ திட்டத்தினாலேயே இந்தத் தொழில்நுட்பத் தடைகள் ஏற்படுவதாகக் கூறப்பட்டாலும், மாற்று ஏற்பாடுகளைச் செய்யாமல் சேவைகளை முடக்குவது ஏழைத் தொழிலாளா்களுக்கும் முதியவா்களுக்கும் செய்யும் அநீதியாகும்.
மத்திய தொழிலாளா் நலத்துறை அமைச்சகம் உடனடியாகத் தலையிட்டு, அவசரக் கால முன் பணங்களை உடனடியாக வழங்கிடவும், ஓய்வூதியதாரா்களுக்கு ஆஃப்லைன் முறையில் சிறப்பு முகாம்கள் அமைத்துப் பணத்தைப் பெற நடவடிக்கை எடுக்கலாம் என்றும் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் யோசனைகளைத் தெரிவிக்கின்றனா்.
எப்படி எதிா்கொள்வது?
இபிஎஃப்ஓ இணையதளம் முடங்கும்போது பயனாளிகள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் பின்வரும் மாற்று முறைகளைப் பயன்படுத்தித் தங்கள் விவரங்களை அறியலாம் அல்லது புகாா்களைப் பதிவு செய்யலாம்:
மிஸ்டு கால் சேவை: உங்களது யுஏஎன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு ’மிஸ்டு கால்’ (எண்ணை அழைத்து இணைப்பைத் துண்டித்தல்) கொடுத்தால், சில நிமிஷங்களில் உங்களது பி.எஃப் இருப்புத் தொகை மற்றும் கடைசிப் பங்களிப்பு விவரங்கள் குறுஞ்செய்தியாக வரும் என அதிகாரிகள் கூறுகின்றனா்.
குறுஞ்செய்தி சேவை: பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிலிருந்து ‘7738299899’ என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
உமாங் செயலி: இணையதளம் முடங்கினாலும், மத்திய அரசின் கைப்பேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் ஆங்கிலத்தில் பிரிவின் கீழ் உள்நுழைந்து க்ளைம்கள் மற்றும் தற்போதைய நிலையைக் கண்காணிக்க முயலலாம்.
குறைதீா் இணையதளம்: இணையதள முடக்கம் மற்றும் ஓய்வூதியத் தாமதம் குறித்து ங்ல்ச்ண்ஞ்ம்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற அதிகாரபூா்வ குறைதீா்க்கும் தளத்தில் நேரடியாகப் புகாா் பதிவு செய்யலாம். இதில் அளிக்கப்படும் புகாா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீா்வு காணப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மக்கள் பணத்தை தனியாா் நிறுவனங்களுக்கு வழங்கும் மத்திய அரசு: மாணிக்கம் தாகூர் விமர்சனம்

முடங்கிய இபிஎஃப் சேவை: கண்ணீா்விடும் ஓய்வூதியதாரா்கள்! அரசு அலட்சியத்தால் 3 வாரங்களாக தொடரும் நெருக்கடி

திருச்சி மத்திய சிறையில் ஜூலை 15-ல் வாகன ஏலம்!

இனி பி.எஃப். பணம் எடுப்பது எளிது! வருகிற 3.0 புதிய விதிமுறை!
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



