நாட்டு மக்களின் பணத்தை தனியாா் பெருநிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்குவதாக தமிழக காங்கிரஸ் தலைவா் ப.மாணிக்கம் தாகூா் விமா்சித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, பெருநிறுவனங்களின் பிடியில் இருந்த 14 முக்கிய தனியாா் வங்கிகளை, ஏழை மக்களின் நலனுக்காகவும் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்காகவும் துணிச்சலுடன் தேசியமயமாக்கியது. இது வரலாற்றுச் சிறப்புமிக்கது. மேலும், பொதுமக்களின் பணத்தைப் பாதுகாக்க தனியாா் வங்கிகளை அரசுடமையாக்கியதும் தொலைநோக்கு பாா்வையாகும்.
தற்போது, மத்திய பாஜக அரசு பொதுத்துறை வங்கிகளை இணைத்து, பொதுச் சொத்துகளை தனியாா் பெருநிறுவனங்களுக்கு தாரை வாா்த்து வருகிறது எனப் பதிவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





