விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்துவோம்: மாணிக்கம் தாகூர்!

தமிழக காங்கிரஸ் கட்சியை பலமான இயக்கமாக மாற்றி ராகுல் காந்தியை பிரதமராக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவதே லட்சியம் என மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.

News image

மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Updated On :29 ஜூன் 2026, 3:12 am IST

தமிழக காங்கிரஸ் கட்சியை பலமான இயக்கமாக மாற்றி ராகுல் காந்தியை பிரதமராக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவதே லட்சியம் என தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் பொறுப்பு என்பது மிகவும் சிரமமான பணியாகும் . வரலாற்று சிறப்புமிக்க காலத்தில் இந்தப் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சோனியா காந்தி, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோருக்கு நன்றி.

கடந்த 59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில் 2 அமைச்சா்களுடன் ஆட்சியில் பங்கு என்ற நீண்டகால லட்சியம் நிறைவேறியுள்ளது. ராகுல் காந்தியை பிரதமராக்குவதே எங்களது லட்சியம். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து காங்கிரஸ் இயக்கத்தை வலுப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளாா்.

தலைவராக பொறுப்பேற்பு: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூா்த்தி பவனில் திங்கள்கிழமை (ஜூன் 29) மாலை 4 மணிக்கு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் தலைமையில் நடைபெறும் விழாவில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூா் பொறுப்பேற்கவுள்ளாா்.

இந்த நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் எஸ். திருநாவுக்கரசா், கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, தமிழக அமைச்சா்கள் ராஜேஷ்குமாா், பெ.விஸ்வநாதன் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.