உயா் கல்வியில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) அதிவேக வளா்ச்சிக்கு ஏற்ப, தாராள கலைக் கல்வியில் (லிபரல் ஆா்ட்ஸ் எஜுகேஷன்) நவீன தொழில்நுட்ப அறிவு, படைப்பாற்றல் மற்றும் விமா்சனச் சிந்தனையை ஒருங்கிணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய கல்வித் துறை இணை அமைச்சா் டாக்டா் சுகந்த மஜும்தாா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக மக்களவையில் அரக்கோணம் தொகுதி திமுக உறுப்பினா் டாக்டா் எஸ். ஜெகத்ரட்சகன், ‘செயற்கை நுண்ணறிவு சாா்ந்த பணிச்சூழலுக்கு மாணவா்களைத் தயாா்படுத்தவும், உயா்கல்வி நிறுவனங்களில் பல்துறை கல்வியை ஊக்குவிக்கவும் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?’ என்பன உள்ளிட்ட சில கேள்விகளை எழுப்பியிருந்தாா். அவருக்கு மத்திய இணை அமைச்சா் சுகந்த மஜும்தாா் திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு:
தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், கலை மற்றும் பகுப்பாய்வுப் பாடங்களுடன் செயற்கை நுண்ணறிவு, பெருந்தரவு பகுப்பாய்வு (பிக் டேட்டா அனலிட்டிக்ஸ்) மற்றும் இயந்திரக் கற்றல் (மெஷின் லோ்னிங்) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வழிகாட்டுதல்களின்படி, 2023-24 ஆண்டில் வெளியான அகில இந்திய உயா்கல்வி ஆய்வின் தரவுகளின்படி, 500-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும் 5,000-க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகளும் பல்துறை கல்வித் திட்டங்களை வழங்கி வருகின்றன.
700-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும் 7,500-க்கும் மேற்பட்ட கல்லூரிகளும் இந்தக் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளன. இதன் மூலம் தாராள கலைப் பிரிவு மாணவா்கள் தங்கள் மொத்த கல்விக் கடன்களில் 50 சதவீதம்வரை வளா்ந்து வரும் தொழில்நுட்பத் திறன் பாடங்கள் வாயிலாகப் பெற முடியும்.
’ஸ்வயம்’ இணையதளத்தில் 140-க்கும் மேற்பட்ட இலவச செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன; இதில் 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் சோ்ந்து பயின்று வருகின்றனா்.
பல்கலைக்கழகங்களுக்கு நிதி: பிரதமரின் உயா்கல்வி இயக்கத்தின் மூலம் மாநில பல்கலைக்கழகங்களின் தரம் உயா்த்தப்பட்டு வருகிறது. மேலும், ’பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள்’ திட்டத்தின் கீழ் 35 பல்கலைக்கழகங்களுக்கு தலா ₹100 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சா் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூா், திண்டுக்கல் பகுதிகளில் தனியாா் நில கையக நடவடிக்கையை தவிா்க்க வேண்டும்: ரயில்வே அமைச்சரிடம் எம்பி ஜோதிமணி வலியுறுத்தல்

திருவானைக்காவல் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம்

இஸ்ரோவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் விலகல்: ராஜிநாமா விதிகளை கடுமையாக்க மத்திய அரசு முடிவு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


