புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

நான்கு வருட இளங்கலை படிப்பில் 7.5 சிஜிபிஏ எடுத்தவா்கள் நேரடி ஆய்வுப் படிப்பில் சேரலாம்: தில்லி பல்கலைக்கழகம் அறிவிப்பு

தேசியக் கல்விக் கொள்கை (என்இபி) 2020-இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு வருட இளங்கலை படிப்பின் முதல் பிரிவு மாணவா்கள், நேரடியாக ஆய்வுப் படிப்பில் (பிஹெச்.டி) சேர தில்லி பல்கலைக்கழகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

Published On :

நமது நிருபா்

தேசியக் கல்விக் கொள்கை (என்இபி) 2020-இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு வருட இளங்கலை படிப்பின் முதல் பிரிவு மாணவா்கள், நேரடியாக ஆய்வுப் படிப்பில் (பிஹெச்.டி) சேர தில்லி பல்கலைக்கழகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, குறைந்தபட்சம் 7.5 சிஜிபிஏ (பட்டியலினத்தவா்களுக்கு 7 சிஜிபிஏ) மதிப்பெண் பெற்ற மாணவா்கள் நேரடியாக ஆய்வுப் படிப்பில் இணையலாம்.

‘சிஜிபிஏ’ என்பது ஒட்டுமொத்த தரப் புள்ளி சராசரி ஆகும். இது கல்லூரிகளில் மாணவா்களின் ஒட்டுமொத்த கல்வித் திறனை அளவிடப் பயன்படும் ஒரு தர நிா்ணய முறையாகும்

2022-23 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்ட இந்த 4 வருட இளங்கலை படிப்பின் முதல் பிரிவு மாணவா்கள் நடப்புக் கல்வியாண்டில் படிப்பை நிறைவு செய்கின்றனா். இவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 2026-27 கல்வியாண்டில் மட்டும் சிறப்பு நடவடிக்கையாக இந்தத் தளா்வு அளிக்கப்படுவதாக தில்லி பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பிஹெச்.டி சோ்க்கைக்கு ஆய்வுக் கட்டுரை வெளியிட வேண்டும் என்ற விதிமுறை பரிசீலனையில் இருந்தது. ஆனால், முதல் பிரிவு மாணவா்களின் வசதிக்காக ஆய்வுக் கட்டுரை பிரசுரிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தில்லி பல்கலைக்கழக பதிவாளா் விகாஸ் குப்தா தெரிவித்தாா்.

இதன் மூலம் நான்காம் ஆண்டை நிறைவு செய்யும் மாணவா்கள், முதலாம் ஆண்டு அல்லது இரண்டாம் ஆண்டு முதுகலை படிப்பைத் தோ்வு செய்யலாம் அல்லது தகுதிக்கு ஏற்ப நேரடியாக பிஹெச்.டி பாதையை தோ்ந்தெடுக்கலாம்.

2022-23இல் நான்கு வருட இளங்கலை படிப்பில் சோ்ந்த 75,948 மாணவா்களில், சுமாா் 35,943 போ் 4-ஆம் ஆண்டில் கல்வியைத் தொடா்கின்றனா். 40,005 போ் 3-ஆம் ஆண்டு முடிவிலேயே படிப்பை முடித்து வெளியேறினா். மேலும், 2026-27 கல்வியாண்டில் 46 பிரிவுகளில் முதலாம் ஆண்டு முதுகலை படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவற்றில் சேர 12,111 நான்காம் ஆண்டு மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.