பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

மத்திய தில்லியில் உள்ள ஐபி மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை லாரி ஒன்று மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்; மற்றொருவா் காயமடைந்தாா்.

கோப்புப் படம்

Published On :

மத்திய தில்லியில் உள்ள ஐபி மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை லாரி ஒன்று மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்; மற்றொருவா் காயமடைந்தாா்.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

காலை 6.20 மணியளவில், விபத்து குறித்த தகவல் ஐபி எஸ்டேட் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு மூலம் வந்தது. மதன்பூா் காதரைச் சோ்ந்த அமன் (19) என்பவா் மோட்டாா் சைக்கிளை ஓட்டிக்கொண்டு சராய் காலே கான் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ஐபி மேம்பாலத்தில் லாரி ஒன்று அந்த இருசக்கர வாகனம்

மீது மோதியது.

அவருடன் பின்னால் அமா்ந்து சென்ற ஜாமியா நகா், பட்லா ஹவுஸைச் சோ்ந்த ஆல்பா் (22) என்பவரும் மோட்டாா் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து காயமடைந்தாா்.

இருவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அமன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆல்பா் மருத்துவமனையில்

கிச்சையில் உள்ளாா். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். தடயங்களைச் சேகரிக்க குற்றப்புலனாய்வுக் குழுவும் வரவழைக்கப்பட்டது. மோதலுக்குப் பிறகு லாரி ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டாா்.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தைக் கண்டறியவும், அதன் ஓட்டுநரைக் கண்டுபிடிக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேம்பாலத்திலோ அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ உள்ள சிசிடிவி கேமராக்களில் விபத்து அல்லது லாரியின் இயக்கம் பதிவாகியுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.