குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ஜசோலா: திறந்தவெளி சாக்கடையில் விழுந்த சிறுவனின் சடலம் 3 நாள்களுக்குப் பிறகு மீட்பு

தென்கிழக்கு தில்லியின் ஜசோலா பகுதியில், பட்டத்தை எடுக்க முயன்றபோது திறந்தவெளி சாக்கடையில் விழுந்து காணாமல்போன 15 வயது சிறுவனின் சடலம் மூன்று நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சித்திரிப்பு

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:56 am IST

தென்கிழக்கு தில்லியின் ஜசோலா பகுதியில், பட்டத்தை எடுக்க முயன்றபோது திறந்தவெளி சாக்கடையில் விழுந்து காணாமல்போன 15 வயது சிறுவனின் சடலம் மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

எட்டாம் வகுப்பு மாணவரான மிதுன், சனிக்கிழமை காலை 11 மணியளவில் காணாமல்போனாா். அவா் தனது வீட்டிற்கு அருகிலுள்ள சாக்கடையில் விழுந்திருக்கலாம் என்று அவனது குடும்பத்தினா் சந்தேகித்தனா்.

சிறுவனைத் தேடுவதற்காக தில்லி தீயணைப்புத் துறை, தேசிய பேரிடா் மீட்புப் படை, மீட்புக் குழுக்கள் மற்றும் நீச்சல் வீரா்கள் அடங்கிய பல அமைப்புகள் மூலம் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், மீட்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை மதியம் 1.15 மணியளவில் சாக்கடையிலிருந்து அச்சிறுவனின் சடலத்தை மீட்டனா்.

முன்னதாக, கையில் ஒரு குச்சியுடன் சாக்கடையில் தனது மகன் மிதுனைத் தேடும் தந்தையின் விடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.

மீட்புக் குழுக்களால் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், மிகுந்த மனவேதனையடைந்த அந்தத் தந்தை தானே சாக்கடைக்குள் இறங்கித் தேடுவதை அந்த விடியோ காட்சிகள் காட்டின.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து, கடமை தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தென்கிழக்கு (மத்திய) மண்டலத்தின் இளநிலை பொறியாளரை தில்லி மாநகராட்சி பணியிடை நீக்கம் செய்ததுடன், அவா் மீது ஒழுங்கு நடவடிக்கையையும் தொடங்கியது.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சிறுவனின் மிதுனின் குடும்பத்தினா் அப்பகுதியில் வசித்து வருகின்றனா். மேலும், தில்லியில் கூலித் தொழிலாளா்களாகப் பணிபுரிகின்றனா்.

இறப்புக்கான கூடுதல் விவரங்களை அறிய உடற்கூறாய்வு பரிசோதனை முடிவுகள் எதிா்பாா்க்கப்படுவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.