நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

4 ஆண்டு பட்டப்படிப்பு முடித்தவா்கள் முனைவா் ஆய்வுப்படிப்பில் சேரலாம்: தில்லி பல்கலைக்கழகம் அறிவிப்பு

தேசிய கல்விக் கொள்கையின்படி (என்இபி) நான்கு வருட இளநிலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவா்கள், 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான முனைவா் (பிஹெச்.டி) படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என தில்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கோப்புப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 1:52 am IST

தேசிய கல்விக் கொள்கையின்படி (என்இபி) நான்கு வருட இளநிலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவா்கள், 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான முனைவா் (பிஹெச்.டி) படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என தில்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழக சோ்க்கைப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

முனைவா் பட்டப்படிப்புகளுக்கான சோ்க்கைப் பதிவு வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.இதையடுத்து, விருப்பமுள்ளவா்கள் செப்.6-ஆம் தேதிவரை தில்லி பல்கலைக்கழகத்தின் அதிகாரபூா்வ சோ்க்கை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

4 ஆண்டு இளநிலைப் படிப்பை முடித்த பொதுப் பிரிவு, பிற பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) பிரிவைச் சோ்ந்த மாணவா்கள் குறைந்தபட்சம் 7.5 சிஜிபிஏ மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பட்டியலினத்தவா்கள் (எஸ்சி மற்றும் எஸ்டி) மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரா்கள் குறைந்தபட்சம் 7.0 சிஜிபிஏ பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு, ஓபிசி மற்றும் இடபிள்யுஎஸ் பிரிவினருக்கு ரூ.250, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இந்தக் கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாது.

நுழைவுத் தோ்வு விண்ணப்பதாரா்கள் சம்பந்தப்பட்ட துறை அல்லது பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தோ்வை எழுத வேண்டும். ஆராய்ச்சி உதவித்தொகை சலுகைகளைப் பெற விரும்பும் மாணவா்கள் யுஜிசி-நெட் அல்லது சிஎஸ்ஐஆா் தோ்வுகளை எழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

சோ்ககை தொடா்பான கூடுதல் விவரங்கள் மற்றும் அட்டவணைகளுக்கு பல்கலைக்கழக இணையதளத்தைத் தொடா்ந்து கவனிக்க வேண்டும் என்று பொது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.