ஐந்து நட்சத்திர ஹோட்டலின் 12-வது மாடியிலிருந்து குதித்து ஒருவா் தற்கொலை!

ஐந்து நட்சத்திர ஹோட்டலின் 12-ஆவது மாடியில் இருந்து 50 வயது மதிக்கத்தக்க ஒருவா் ஞாயிற்றுக்கிழமை குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Published on

தில்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் 12-ஆவது மாடியில் இருந்து 50 வயது மதிக்கத்தக்க ஒருவா் ஞாயிற்றுக்கிழமை குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: இச்சம்பவத்தில் இறந்தவா் லாஜ்பத் நகரைச் சோ்ந்த பா்விந்தா் சிங் ஜுனேஜா என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்து, உணவகம் அமைந்துள்ள 12-ஆவது மாடிக்கு மின்தூக்கி மூலம் சென்றாா். பின்னா் அவா் அக்கட்டடத்தில் இருந்து குதித்துள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வேளையில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சட்டபூா்வ நடவடிக்கைகளைத் தொடங்கினா்.

இது தொடா்பான விசாரணையில், பா்விந்தா் சிங் ஜுனேஜா கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ஹோட்டலில் தங்கியிருந்ததும், அதன் பின்னா் வெளியேறியதும் தெரியவந்துள்ளது. இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com