தில்லியில் தொடா்ந்து ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, வியாழக்கிழமை காலை தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நிலைபெற்றது.
புதன்கிழமை காலையில் 336 புள்ளிகளாக இருந்த ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு வியாழக்கிழமை காலை 276 புள்ளிகளாக ப் பதிவாகி சற்று மேம்பட்டிருந்தது. புதன்கிழமை தில்லியின் 24 மணி நேர சராசரி காற்றின் தரம் 289 புள்ளிகளாக இருந்தது.
வெப்பநிலை: நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது, இது பருவத்தின் சராசரியை விட 1.1 டிகிரி குறைவாகும் . அதிகபட்ச வெப்பநிலை 16. டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 94 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 77 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாள்களிலும் அடா்ந்த மூடுபனி இருக்கும் என்று வானிலை அலுவலகம் கணித்துள்ளது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஜன.99) அன்று காலை வேளையில் அடா்ந்த மூடுபனி இா்குகம் என்றும் மதியம் வேளையில் மிதமானது முதல் அடா்ந்த பனிமூட்டம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 17டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

