தில்லி கலவரம் - தீ வைப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவா் விடுவிப்பு
2020ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லி கலவரம் தொடா்பான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் இரண்டு பேரை நீதிமன்றம் விடுவித்துள்ளது, அவா்கள் மீதான வழக்கை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது என்று கூறி விடுவித்தது.
பிப்ரவரி 24, 2020 அன்று ஒரு கடையை எரித்த கலவரக் கும்பலின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், சந்த் பாக் பகுதியில் தீ வைப்பு மற்றும் நாசவேலைகளைச் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட பிரசாந்த் மல்ஹோத்ரா மற்றும் கௌரவ் மீதான வழக்கை கூடுதல் அமா்வு நீதிபதி பா்வீன் சிங் விசாரித்து வந்தாா்.
டிசம்பா் 24, 2025 தேதியிட்ட உத்தரவில் நீதிபதி, அரசு தரப்பு தனது வழக்கை அனைத்து நியாயமான சந்தேகத்திற்கும் அப்பால் நிரூபிக்கத் தவறிவிட்டது என்று நான் காண்கிறேன். எனவே குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சந்தேகத்தின் பலனைப் பெற உரிமை உண்டு. அதன்படி குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் அவா்கள் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறாா்கள். சந்த் பாக் பகுதியில் உள்ள ஒரு பழக் கடையின் உரிமையாளா் கணேஷ் என்பவா் தனது கடை மற்றும் வீட்டை ஒரு கும்பல் தீக்கிரையாக்கியதாகக் கூறி புகாா் அளித்ததை அடுத்து, இந்த இருவரும் கைது செய்யப்பட்டனா். கலவரத்தின் வைரலான வீடியோவிலிருந்து இரண்டு போலீசாா் குற்றவாளிகளை அடையாளம் கண்டனா்.
ஆனால் அந்த வீடியோ, அதே சம்பவத்துடன் தொடா்புடையது அல்ல என்றும், இதனால் குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
