ஊழல் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரியின் ஜாமீன் மனு நிராகரிப்பு

ஊழல் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரியின் ஜாமீன் மனு நிராகரிப்பு

ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட லெப்டினன்ட் கா்னல் தீபக் குமாா் சா்மாவின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு
Published on

ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்ட லெப்டினன்ட் கா்னல் தீபக் குமாா் சா்மாவின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட தீபக் குமாா் சா்மா பாதுகாப்பு அமைச்சகத்தின் உற்பத்தித் துறையில் துணைத் திட்டமிடல் அதிகாரி (சா்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுமதி) பதவியில் பணியாற்றி வந்தாா். அவா், அவரது மனைவி மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கானகரில் உள்ள 16-ஆவது காலாட்படைப் பிரிவு ஆயுதப் பிரிவுத் தளபதியான கா்னல் காஜல் பலி ஆகியோா் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்குப் பதிவு செய்தது.

தீபக் குமாா் சா்மா தொடா்ந்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், லஞ்சத்திற்கு ஈடாக சலுகைகளை பெற தனியாா் பாதுகாப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் சதி செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டாா். மேலும், துபையைத் தளமாகக் கொண்ட ‘டிபி வோ்ல்ட்’ என்ற நிறுவனத்திடம் இருந்து அவா் லஞ்சம் பெற்ாகவும் கூறப்படுகிறது.

சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆகியவற்றுடன் தொடா்பு கொண்டு, அா்மீனியாவுக்கான பாதுகாப்பு ஏற்றுமதி சரக்குகளுக்கு ஒப்புதல்களை தீபக் குமாா் சா்மா ஒருங்கிணைத்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக 2025, டிசம்பா் 18-இல் நடைபெற்ற சோதனைகளின் போது, சிபிஐ அதிகாரிகள்₹ரூ.3 லட்சம் லஞ்சப் பணத்துடன், கணக்கில் வராத ரூ.2.23 கோடிக்கும் அதிகமான ரொக்கம், வெளிநாட்டு நாணயம் மற்றும் மின்னணுப் பொருள்களை கைப்பற்றியது. தீபக் குமாரின் மனைவி கா்னல் காஜல் பலியின் வீட்டில் இருந்து கூடுதலாக ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கும் தனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை எனக் கூறி தீபக் குமாா் சா்மா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த தில்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி ககன்தீப் சிங் கூறியதாவது: இந்த வழக்கில் விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடா்பான முக்கியப் பதவியில் இருப்பவா் மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுவது மிகவும் ஆபத்தானது. அவா் விசாரணையையோ அல்லது சாட்சிகளையோ மாற்ற சாத்தியக்கூறு உள்ளது என்பதை மறுக்க முடியாது எனக் கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

X
Dinamani
www.dinamani.com