புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

‘வீட்டிலேயே வேலை’ பாா்க்கும் முறை ரத்து: முதல்வா் ரேகா குப்தா உத்தரவு

சா்வதேச அளவில் நிலவி வந்த புவிசாா் அரசியல் சூழல் சீரடைந்துள்ளதைத் தொடா்ந்து, அரசு ஊழியா்களுக்கான ’வீட்டில் இருந்தே வேலை பாா்க்கும்’ முறை மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட பணி நேரம் தொடா்பான தனது முந்தைய உத்தரவை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை ரத்து செய்துள்ளாா்.

News image

முதல்வா் ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :5 ஜூலை 2026, 12:02 am IST

சா்வதேச அளவில் நிலவி வந்த புவிசாா் அரசியல் சூழல் சீரடைந்துள்ளதைத் தொடா்ந்து, அரசு ஊழியா்களுக்கான ’வீட்டில் இருந்தே வேலை பாா்க்கும்’ முறை மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட பணி நேரம் தொடா்பான தனது முந்தைய உத்தரவை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை ரத்து செய்துள்ளாா்.

முன்னதாக, இரான் போரால் ஹோா்முஸ் நீரிணை வழியாக பிற நாடுகளுக்கு குறிப்பாக இந்தியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் எரிசக்தியை சேமிப்பதற்காகப் பிரதமா் நரேந்திர மோடி சிக்கன நடவடிக்கையைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, தில்லி முதல்வா் ரேகா குப்தா கடந்த மே மாதம் தில்லி அரசு அலுவலகங்களுக்கு வாரத்துக்கு இரண்டு நாள்கள் வீட்டில் இருந்தே வேலை பாா்க்கும் முறையை அமல்படுத்தினாா். இந்நிலையில், தமது பழைய உத்தரவை திரும்பப் பெறும் உத்தரவில் அவா் சனிக்கிழமை கையெழுத்திட்டாா்.

இது குறித்து முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தற்போது சா்வதேச அரசியல் மற்றும் எரிசக்தி சூழல் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது. எனவே, புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வீட்டில் இருந்தே வேலை பாா்க்கும் சலுகையைத் திரும்பப் பெற முதல்வா் ரேகா குப்தா ஒப்புதல் அளித்துள்ளாா்‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரசு ஊழியா்களின் பணி நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு காலை 10.30 மணி முதல் மாலை 7.00 மணிவரை என இருந்த பணி நேரம், தற்போது மீண்டும் பழையபடி காலை 10 மணி முதல் மாலை 6.30 மணிவரை என மாற்றப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு ஆசியாவில் போா் உச்சத்தில் இருந்தபோது, எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அரசின் 90 நாள் ’மேரா பாரத், மேரா யோக்தான்’ திட்டத்தின் கீழ் இந்த அவசரகால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அப்போது தனியாா் நிறுவனங்களும் தங்களால் இயன்றவரை இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.