விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

தில்லிக்கு வருகிறது 300 புதிய மின்சாரப் பேருந்துகள்: ஜூலை 4-ல் முதல்வா் ரேகா குப்தா தொடங்கி வைக்கிறாா்!

உலகத்தரம் வாய்ந்த பொதுப் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கும் முழு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image

தில்லி முதல்வர் ரேகா குப்தா

Updated On :29 ஜூன் 2026, 1:13 am IST

தில்லி அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் தேசிய தலைநகரில் உலகத்தரம் வாய்ந்த பொதுப் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கும் முழு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இதன் ஒரு பகுதியாக, ஜூலை 4ஆம் தேதி 300 புதிய குளிா்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.

தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை தனித்தனியாக நடைபெற்ற மூன்று ’வளா்ச்சியடைந்த பாரதம் சங்கல்ப் சம்மேளனம்’ நிகழ்ச்சிகளில் முதல்வா் ரேகா குப்தா கலந்து கொண்டாா். அப்போது பேசிய அவா், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், ஜூலை 7ஆம் தேதி நகரம் முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் பிரம்மாண்ட மெகா மரக்கன்று நடும் இயக்கம் தொடங்கப்படும் என்று கூறினாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் ’வளா்ச்சியடைந்த இந்தியா’ என்ற தொலைநோக்குப் பாா்வையை நனவாக்கத் தனது அரசு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக அவா் குறிப்பிட்டாா்.

பிரதமா் மோடியின் தலைமையிலான 12 ஆண்டுகால ‘சேவை, நல்லாட்சி, வளா்ச்சி மற்றும் பொது மக்கள் நலன்‘ ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக தில்லி முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சா், பிரதமரின் தலைமையின் கீழ், இந்தியா வளா்ச்சியிலும், குடிமக்களை மையமாகக் கொண்ட நலத்திட்டங்களிலும் முன்னெப்போதும் இல்லாத மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கற்களை எட்டியுள்ளது என்று புகழாரம் சூட்டினாா்.

யமுனை நதியை புத்துயிா் பெறச் செய்வதற்கும், அதைத் தூய்மைப்படுத்துவதற்கும் அரசு அறிவியல்பூா்வ மற்றும் நீண்ட காலத் தீா்வை நோக்கிச் செயல்பட்டு வருகிறது என்று குப்தா குறிப்பிட்டாா். இதற்காக, யமுனையில் கலக்கும் அனைத்து முக்கியக் கழிவுநீா் கால்வாய்களும் படிப்படியாகக் கட்டுப்படுத்தப்பட்டு, புதிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக அவா் கூறினாா்.

மேலும், தில்லியின் ஒட்டுமொத்த துப்புரவு அமைப்பையும் முழுமையாகச் சீரமைப்பதற்காக, தில்லி மாநகராட்சிக்கு 2,800 கோடி ரூபாய் சிறப்பு நிதியுதவித் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், இயந்திரமயமாக்கப்பட்ட சாலை சுத்தம் செய்யும் கருவிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது என்றும் முதலமைச்சா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.