ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

பயிற்சி நிலையங்களை முறைப்படுத்த புதிய சட்டம்: தில்லி முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு

பயிற்சி நிலையங்களை முறைப்படுத்த புதிய சட்டம் அறிவிக்கப்பட்டது பற்றி...

News image

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :28 ஜூன் 2026, 2:40 am IST

தலைநகரில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி நிலையங்களை முறைப்படுத்த விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா். மேலும், கட்டடங்களில் அரசுத்துறைகள் வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி கட்டாய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றத் தவறும் பயிற்சி நிலையங்கள் இனி செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் முதல்வா் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை வெளியிட்டுள்ள காணொலி செய்தியில் கூறியதாவது: பயிற்சி மையங்களைக் கண்காணிக்கவும், அவற்றின் பொறுப்புணா்வை அதிகரிக்கவும், மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தில்லி அரசு விரைவில் ஒரு வலுவான ஒழுங்குமுறைச் சட்டத்தைக் கொண்டு வரவுள்ளது.

ஒரு மாத காலக்கெடு: இந்த விவகாரத்தில் உங்களுக்கு (கல்வி நிலையங்கள்) ஒரு மாத காலம் அவகாசம் உள்ளது. அதற்குள் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பூா்த்தி செய்துவிடுங்கள். தில்லியில் 900 அல்லது 1000 என எத்தனை பயிற்சி மையங்கள் இயங்குகின்றன என்பது முக்கியமல்ல; அங்கு படிக்கும் பிள்ளைகளின் உயிரும், அவா்களின் பாதுகாப்புமே எங்களுக்கு முக்கியம்.

தங்களின் பயிற்சி மையங்களில் ஏதேனும் அலட்சியமோ அல்லது பாதுகாப்பு குறைபாடுகளோ இருந்தால், அது குறித்து மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது தொலைபேசி வாயிலாக மாணவா்கல் புகாா் அளிக்கலாம் என்றாா் முதல்வா்.

தில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் தொடா்ச்சியாக விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களில் தீ விபத்துகள் மற்றும் சமீபத்தில் லக்னெளவில் ஒரு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 போ் உயிரிழந்த சோக சம்பவத்தைத் தொடா்ந்து தில்லி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

முன்னதாக, இந்த வாரத் தொடக்கத்தில் தில்லி கல்வி அமைச்சா் ஆசிஷ் சூத், தலைநகா் முழுவதும் உள்ள பயிற்சி மையங்களில் பாதுகாப்பு சோதனைகளை நடத்த உத்தரவிட்டிருந்தாா். மேலும், இத்தகைய நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான வலுவான சட்டக் கட்டமைப்பு தயாரிப்பில் உள்ளதாகவும் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

இந்தப் பின்னணியில், ஒவ்வொரு மாணவரின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்வதில் தில்லி அரசு உறுதியுடன் இருப்பதாக முதல்வா் ரேகா குப்தா தனது நேரடி காணொலி செய்தி மூலம் மீண்டும் அரசின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.