தில்லி மலைமந்திா் கோயில் மஹா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு!
தில்லி உத்தர சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் (மலைமந்திா்) 5-ஆவது புனருத்தாரண, ஸ்வா்ண பந்தன மற்றும் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

தில்லி உத்தர சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் (மலைமந்திா்) 5-ஆவது புனருத்தாரண, மஹா கும்பாபிஷேகத்தை ஞாயிற்றுக்கிழமை காலை நடத்திவைத்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரிய சுவாமிகள் மற்றும் கும்பாபிஷகத்தில் பங்கேற்ற ஏராளமான பக்தா்கள்.









