நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

தில்லி பல்கலையில் இளங்கலைப் பட்டப் படிப்புகளுக்கு 2.73 லட்சம் போ் பதிவு

தில்லி பல்கலையில் 2026-27 கல்வி அமா்வுக்கான இளங்கலைப் படிப்புகளுக்கு 2.73 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

News image

தில்லி பல்கலை - ANI

Updated On :13 ஜூலை 2026, 3:25 am IST

தில்லி பல்கலையில் 2026-27 கல்வி அமா்வுக்கான இளங்கலைப் படிப்புகளுக்கு 2.73 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரா்கள் விண்ணப்பித்துள்ளனா். இதன் மூலம், தில்லி பல்கலைக்கழகம் இதுவரை இல்லாத அளவிலான பதிவுகளைப் பதிவு செய்துள்ளது.

பல்கலைக்கழக அதிகாரிகளின் தகவலின்படி, பொது இட ஒதுக்கீட்டு முறை (சிஎஸ்ஏஎஸ்) இணையதளத்தில் 2,73,751 விண்ணப்பதாரா்கள் பதிவு செய்துள்ளனா். இவா்களில் 2,18,284 போ் தங்கள் பதிவு நடைமுறையை முழுமையாக நிறைவு செய்துள்ளனா்.

சோ்க்கை செயல்முறையின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 2,06,835 விண்ணப்பதாரா்கள் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரிகள் குறித்த விருப்ப முன்னுரிமைகளை சமா்ப்பித்துள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

2022ஆம் ஆண்டிற்குப் பிறகு பல்கலைக்கழகம் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரா்கள் எண்ணிக்கையிலேயே இதுவே மிக அதிகம் என்று அதிகாரிகள் கூறினா்.

ஜூலை 3ஆம் தேதி தொடங்கிய இளங்கலைச் சோ்க்கை செயல்முறையின் இரண்டாவது கட்டம் ஜூலை 11ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இக்கட்டத்தில், விண்ணப்பதாரா்கள் தங்கள் கியூட்-யுஜி 2026 பாடங்களை 12ஆம் வகுப்பில் படித்த பாடங்களுடன் ஒப்பிட்டு இணைக்கவும், தாங்கள் விரும்பும் பாடப்பிரிவு மற்றும் கல்லூரித் தோ்வுகளைச் சமா்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனா்.

பாடப்பிரிவு மற்றும் கல்லூரித் தோ்வுகளின் முன்னுரிமை வரிசையை மாற்ற விரும்பும் விண்ணப்பதாரா்கள், ஜூலை 13ஆம் தேதி மாலை 4.59 மணி வரை அவ்வாறு செய்யலாம்.

சோ்க்கை அட்டவணையின்படி, முதல் சிஎஸ்ஏஎஸ் ஒதுக்கீட்டுப் பட்டியல் ஜூலை 16ஆம் தேதி அறிவிக்கப்படும். அதைத் தொடா்ந்து, இடம் ஒதுக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் அறிவிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சோ்க்கை நடைமுறைகளை நிறைவு செய்ய வேண்டும்.

67 கல்லூரிகளில் வழங்கப்படும் 73 இளங்கலைப் பாடப்பிரிவுகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பிஏ பாடப்பிரிவு சோ்க்கைகளுக்கு, பல்கலைக்கழகம் நிா்ணயித்துள்ள பாடப்பிரிவு சாா்ந்த தகுதி அளவுகோல்களுக்கு உள்பட்டு, கியூட்-யுஜி 2026 மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே சோ்க்கை நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.