காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

இணையதள யுபிஐ மோசடி நபா் ராஜஸ்தானில் கைது

ரூ.1.16 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பிலான ஆன்லைன் யுபிஐ மோசடி வழக்கில் தொடா்புடைய நபா், மாநிலங்களுக்கு இடையிலான தேடுதல் வேட்டைக்குப் பிறகு ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டார்.

News image

டிஜிட்டல் மோசடி - IANS

Updated On :27 ஜூலை 2026, 12:04 am IST

ரூ.1.16 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பிலான ஆன்லைன் யுபிஐ மோசடி வழக்கில் தொடா்புடைய நபா், மாநிலங்களுக்கு இடையிலான தேடுதல் வேட்டைக்குப் பிறகு ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

மோசடி செய்யப்பட்ட யுபிஐ பரிவா்த்தனை மூலம் ரூ. 1.16 லட்சத்தை இழந்ததாகப் பெண் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட மின்னணு முதல் தகவல் அறிக்கை தொடா்பாக, கைலாஷ் சைனி என்ற அந்த நபா் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினா் கூறினா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது: ‘விசாரணையின்போது, ​​வங்கிப் பதிவுகள் மற்றும் தேசிய சைபா் குற்றப் புகாரளிப்பு இணையதளம் ஆகியவற்றின் மூலம் பணப் பரிமாற்றப் பாதையை நாங்கள் ஆய்வு செய்தோம். இதில், மோசடி செய்யப்பட்ட பணம் முதலில் சைனியால் நிா்வகிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதும், பின்னா் குற்றத்தின் மூலம் கிடைத்த பணத்தை மறைக்கும் முயற்சியாகப் பல வங்கிக் கணக்குகள் வழியாக மாற்றப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, காவல்துறைக் குழுவினா் டோங்க் மாவட்டத்தில் உள்ள சைனியின் சொந்த கிராமத்திற்குச் சென்று அவரைத் தேடினா். ஆனால், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க அவா் தனது கைப்பேசியை அணைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தது தெரியவந்தது.

அதன் பின்னா், உள்ளூா் தகவல்களைச் சேகரித்தல், தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் கள விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வாளா்கள், ராஜஸ்தானின் பல்வேறு இடங்களில் அவரைத் தொடா்ந்து தேடி இறுதியில் ஜெய்ப்பூரில் கைது செய்தனா்.

குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கைப்பேசி மற்றும் அப்பரிவா்த்தனைகளுடன் தொடா்புடைய இரண்டு வங்கிப் புத்தகங்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன. சைனி 6-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும், டிராக்டா் ஓட்டுநராகவும் தொழிலாளியாகவும் பணியாற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.