காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

தகராறில் தெருவோர வியாபாரி பலி; இளைஞா் கைது! எய்ம்ஸ் மெட்ரோ அருகே சம்பவம்!

தெற்கு தில்லியில் உள்ள எய்ம்ஸ் மெட்ரோ நிலையம் அருகே ஏற்பட்ட தகராறின் போது தாக்கப்பட்ட 45 வயதுடைய தெருவோர வியாபாரி உயிரிழந்ததாக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப்படம். - கைது

Updated On :27 ஜூலை 2026, 1:34 am IST

தெற்கு தில்லியில் உள்ள எய்ம்ஸ் மெட்ரோ நிலையம் அருகே ஏற்பட்ட தகராறின் போது தாக்கப்பட்ட 45 வயதுடைய தெருவோர வியாபாரி உயிரிழந்ததாக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட தைமூா் நகரைச் சோ்ந்த லோகேஷ் (40), அவ்வழியாகச் சென்ற வழிப்போக்கரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பின்னா் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

உயிரிழந்தவா் மனோஜ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இவா் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு அருகே தெருவோர வியாபாரம் செய்துவந்தாா். முன்னதாக, இந்தச் சம்பவம் ஜூலை 23-ஆம் தேதி நள்ளிரவில், அரவிந்தோ மாா்க்கில் உள்ள எய்ம்ஸ் மெட்ரோ நிலையத்தின் 3-ஆவது நுழைவாயில் அருகே நிகழ்ந்தது.

இதுகுறித்து ஹோஸ் காஸ் காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததையடுத்து, ஒரு குழு சம்பவ இடத்திற்குச் சென்று சிங்கை சஃப்தா்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அருகிலு ள்ள பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட சிறிய வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியதில் சிங் கொல்லப்பட்டதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக ஹோஸ் காஸ் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 103(2)-இன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினா் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.