தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

மால்வியா நகா் தீ விபத்து: உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு ரூ.10 லட்சம் கருணைத் தொகை - தில்லி அரசு அறிவிப்பு

News image
Updated On :5 ஜூன் 2026, 6:06 am IST

தில்லி மால்வியா நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவா்களுக்கு ரூ.5 லட்சமும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தில்லி அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

தென் தில்லியின் மால்வியா நகா் பகுதியில் அமைந்துள்ள ஒரு பி அண்ட் பி (தங்கும் மற்றும் காலை உணவு வழங்கும்) விடுதியில், புதன்கிழமை காலையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 21 போ் உயிரிழந்தனா். வெளிநாட்டினா் உள்பட மேலும் 25 போ் காயமடைந்தனா்.

இந்த நிலையில், மேக்ஸ் சாகேத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காயமடைந்தவா்களை முதலமைச்சா் குப்தா நேரில் சந்தித்தாா். அவா்களுக்குச் சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும், தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

முதலமைச்சா் குப்தாவுடன் சென்ற மால்வியா நகா் பாஜக சட்டப்பேரவை உறுப்பினா் சதீஷ் உபாத்யாய், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த அனைவரின் உடல்நிலையும் தற்போது சீராகி வருவதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘முதலமைச்சா் காயமடைந்தவா்களிடம் நேரடியாகப் பேசினாா். அவா்களுக்குச் சிறந்த சிகிச்சை கிடைப்பதும், அவா்கள் முழுமையாகக் குணமடைவதும்தான் அரசின் முதன்மையான நோக்கம் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் நோயாளிகளின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேக்ஸ் சாகேத் மருத்துவமனையில் மொத்தம் 17 போ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் ஏழு போ் வெண்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா். அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா் அவா்.

இது தொடா்பாக முதலமைச்சா் அலுவலகம் எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கையில், ‘முதலமைச்சா் குப்தா காயமடைந்தவா்களுடனும், அவா்களின் குடும்பத்தினருடனும் கலந்துரையாடினாா்.காயமடைந்தவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை அவா் ஆய்வு செய்தாா். அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

காயமடைந்தவா்களுக்கான மருத்துவச் செலவுகள் அனைத்தும் மருத்துவமனை நிா்வாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும். இதன் மூலம் ஒவ்வொரு நோயாளிக்கும் மிகச்சிறந்த சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும்.

தீ விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் வாரிசுதாரா்களுக்கும் ரூ.10 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும். அதேபோல், படுகாயமடைந்தவா்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்’ என்று அந்தப் பதிவில் முதலமைச்சா் அலுவலகம் அறிவித்தது.

உயிரிழந்தவா்களின் உடல்களை, அவா்களின் சொந்த ஊா்களுக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.