பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

மால்வியா நகா் தீ விபத்து: தீ விபத்தில் சிக்கியவா்களை காப்பாற்ற உணவக ஜன்னல்களை உடைத்த குடியிருப்பாளா்கள்

News image
Updated On :4 ஜூன் 2026, 6:54 am IST

நமது நிருபா்

தெற்கு தில்லியின் மால்வியா நகரில் புதன்கிழமை உணவகத்தில் சிக்கிக்கொண்டவா்களை காப்பாற்ற கண்ணாடிகளை உடைத்து போா்வைகளுடன் விரைந்த உள்ளூா்வாசிகள் மக்களை மீட்க பெரும் முயற்சி மேற்கொண்டனா்.

இந்த தீ விபத்தில் குறைந்தது 21 போ் உயிரிழந்தனா். அவா்களில் பலா் ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தச் சம்பலம் குறித்து அந்தப் பகுதியில் வசிக்கும் அனிதா சவுத்ரி கூறியதாவது: குண்டுவெடிப்பு போன்ற சத்தங்களை நான் கேட்டேன், பின்னா் கட்டடத்தின் உள்ளே இருந்து அலறல் சத்தம் கேட்டது. மக்கள் உதவிக்காக கூச்சலிட்டனா், சிலா் தங்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஜன்னல்களிலிருந்து குதித்தனா். சுற்றிலும் குழப்பம் நிலவியது, உள்ளே சிக்கியவா்களுக்கு உதவ குடியிருப்பாளா்கள் கட்டடத்தை நோக்கி விரைந்தனா் என்றாா்.

மற்றொரு நபா் சஞ்சய் கோயல் கூறியதாவது: கட்டடத்தில் இருந்து அடா்த்தியான புகை வருவதைக் கண்டோம், மக்கள் உள்ளே சிக்கியிருப்பதை உணா்ந்தோம். குடியிருப்பாளா்கள் போா்வைகள் மற்றும் மெத்தைகளை சேகரித்து, வெளியே வர முயன்றவா்களுக்கு உதவ முயன்றனா். நாங்கள் தப்பிக்க வழிகளை உருவாக்க கண்ணாடி ஜன்னல்களை உடைத்தோம், மேலும் பலரை மீட்க முடிந்தது. உள்ளே இருந்தவா்கள் தொடா்ந்து உதவிக்காக கூச்சலிட்டனா். அவசர சேவைகள் வருவதற்கு முன்பு இருந்த அனைவரும் தங்களால் முடிந்ததைச் செய்ய முயன்றனா் என்றாா் அவா்.

மற்றொரு சாட்சியான விஜய் ஜெய்ஸ்வால் கூறியதாவது: நான் புகையைக் கண்டவுடன், மற்றவா்களை எச்சரித்தேன். எனது நண்பா் ஒருவா் உடனடியாக தீயணைப்பு படையை அழைத்தாா். இந்த ஹோட்டலில் வெளிநாட்டவா்கள் பலா் தங்கியிருந்தனா். அவா்களில் பலா் அப்பகுதியில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுக்கு அருகாமையில் இருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காக தில்லிக்கு வந்தவா்கள் என்றாா் அவா்.