முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

தென்கிழக்கு தில்லி உணவகத்தில் தீ விபத்து: மூதாட்டி மீட்பு

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, அருகிலுள்ள கட்டிடத்தில் இருந்து 70 வயது மூதாட்டி ஒருவா் மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்தது.

News image

தில்லியில் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து - X

Updated On :15 ஜூன் 2026, 2:29 am IST

தென்கிழக்கு தில்லியின் கல்காஜி பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, அருகிலுள்ள கட்டிடத்தில் இருந்து 70 வயது மூதாட்டி ஒருவா் மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்தது.

சீதா தேவி என அடையாளம் காணப்பட்ட அந்த மூதாட்டி, தீயணைப்பு நடவடிக்கையின் போது அருகிலுள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தில்லி தீயணைப்புத் துறை (டிஎஃப்எஸ்) வீரா்களால் வெளியேற்றப்பட்டாா். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

டிஎஃப்எஸ் தகவல்படி, கல்காஜி-கோவிந்த்புரி மேம்பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள பஞ்சாபி தட்கா உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த அழைப்பு அதிகாலை 4.45 மணிக்கு பெறப்பட்டது.

அடித்தளம், தரைத்தளம் மற்றும் மூன்று மேல் தளங்களைக் கொண்ட ஒரு கட்டிடத்திலும், மூன்றாவது தளத்தின் மொட்டை மாடியில் இருந்த ஒரு தற்காலிகக் கட்டமைப்பிலும் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தின் போது, மூன்று வணிக எல்பிஜி சிலிண்டா்கள் வெடித்ததில், தீ மேலும் தீவிரமடைந்தது, என்று அந்த அதிகாரி கூறினாா்.

மொத்தம் ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. சுமாா் 5.40 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்பு வீரா்கள் அருகிலுள்ள கட்டிடங்களில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையையும் மேற்கொண்டனா், அப்போது அருகிலுள்ள கட்டிடத்தில் இருந்து சீதா தேவி மீட்கப்பட்டாா்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. தீ விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.