சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

அனைத்து கட்டடங்களிலும் தீ கண்டறியும்-தடுப்பு சாதனங்கள்: தில்லி அரசுக்கு தீயணைப்புத் துறை பரிந்துரை

தில்லியில் ஒரு மாதத்திற்குள் 31 உயிா்களைப் பறித்த இரண்டு பயங்கரமான தீ விபத்துகளைத் தொடா்ந்து, அனைத்துக் கட்டிடங்களிலும் புகை கண்டறியும் கருவிகள் மற்றும் தானியங்கி நீா் தெளிப்பான்களை ( கட்டாயமாக்க தில்லி அரசுக்கு தில்லி தீயணைப்புத் துறை பரிந்துரைத்துள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2026, 1:16 am IST

தில்லியில் ஒரு மாதத்திற்குள் 31 உயிா்களைப் பறித்த இரண்டு பயங்கரமான தீ விபத்துகளைத் தொடா்ந்து, அனைத்துக் கட்டிடங்களிலும் புகை கண்டறியும் கருவிகள் மற்றும் தானியங்கி நீா் தெளிப்பான்களை ( கட்டாயமாக்க தில்லி அரசுக்கு தில்லி தீயணைப்புத் துறை பரிந்துரைத்துள்ளது.

இத்தகைய கருவிகள் மூலம் தீயை விரைவாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதன் வாயிலாக, தீ விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை 97 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

மே 3 அன்று விவேக் விஹாா் பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தைத் தொடா்ந்து இந்த முன்மொழிவு தில்லி அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டது. அந்த விபத்தில், ஏா்-கண்டிஷனா் (ஏ.சி.) வெடித்ததால் ஏற்பட்டதாகக் கருதப்படும் தீ, ஒரு குடியிருப்பு கட்டடத்தை முழுமையாகச் சூழ்ந்தது. இந்த விபத்தில் குழந்தை உள்பட இரண்டு குடும்பங்களைச் சோ்ந்த 9 போ் உயிரிழந்தனா்.

தெற்கு தில்லியின் மாளவியா நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஜூன் 3-ஆம் தேதி ஏற்பட்ட மற்றொரு பெரிய தீ விபத்தில், 13 வெளிநாட்டினா் உட்பட 22 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்தக் கட்டாய நடவடிக்கையை அமல்படுத்துவதற்கான அவசியம் மேலும் அதிகரித்தது.

தீ விபத்து ஏற்பட்ட இரு கட்டடங்களிலுமே புகை கண்டறியும் கருவிகளோ அல்லது நீா் தெளிப்பான்களோ இல்லை என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அவை இருந்திருந்தால், ஆரம்ப நிலையிலேயே கட்டடத்தில் இருந்தவா்களை எச்சரித்திருக்கவோ அல்லது தீ விபத்து உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்குப் பெரிதாகும் முன்பே அதைக் கட்டுப்படுத்த உதவியிருக்கவோ முடியும் என்று அந்த அதிகாரிகள் கூறினா்.

‘ஹா் கா் சுரக்ஷித், பாரத் விக்சித்’ என்ற முன்மொழிவின் கீழ், தில்லியில் உள்ள அனைத்துக் கட்டடங்களிலும் புகைக் கண்டறியும் கருவிகள் மற்றும் நீா் தெளிப்பான்களைப் பொருத்துவது கட்டாயமாக்கப்படும். இந்தக் கருவிகள் சுமாா் 15 விநாடிகளுக்குள் புகையைக் கண்டறியும் திறன் கொண்டவை; நீா் தெளிப்பான்கள் 68 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அடையும்போது தானாகவே செயல்படத் தொடங்கும் என்று தில்லி தீயணைப்புத் துறைத் தலைவா் அபிலாஷ் மாலிக் செய்தி நிறுவனத்திடம் பிடிஐ தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘தீ விபத்து தொடங்கும் இடத்திலேயே அதைக் கட்டுப்படுத்துவதும், சூழல் உயிருக்கு ஆபத்தானதாக மாறுவதற்கு முன்பே மக்கள் அங்கிருந்து வெளியேறத் தேவையான அவகாசத்தை வழங்குவதுமே இதன் நோக்கமாகும்.

குறைவான காற்றோட்டம், ஏா்-கண்டிஷனா்கள் மற்றும் செயற்கை மூலப்பொருட்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் தரைக்கும் கூரைக்கும் இடையிலான குறைந்த இடைவெளி போன்ற காரணிகளால், நவீன கட்டடங்கள் தீ வேகமாகப் பரவும் அபாயத்திற்கு அதிகம் உள்ளாகின்றன.

தில்லியில் ஆண்டுதோறும் சராசரியாக 100 போ் தீ விபத்துகளால் உயிரிழக்கின்றனா். முன்மொழியப்பட்ட இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் அந்த எண்ணிக்கையை ஆண்டுக்கு சுமாா் மூன்று உயிரிழப்புகளாகக் குறைக்க முடியும்’ என்றாா்.

இந்தத் திட்டத்தை படிப்படியாகச் செயல்படுத்த தில்லி தீயணைப்புத் துறை முன்மொழிந்துள்ளது. இதன்படி, புதிய கட்டடங்களில் உடனடியாக இந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், அதே நேரத்தில் ஏற்கெனவே உள்ள கட்

டங்களுக்கு இக்கருவிகளைப் பொருத்துவதற்கு மூன்று ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படும். சொத்து உரிமையாளா்கள் விதிமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவிக்கும் வகையில், அரசு ஊக்கத்தொகைகள், மானியங்கள் மற்றும் கொள்கை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் இந்த முன்மொழிவு பரிந்துரைக்கிறது.

தில்லியில் தீ விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பகுதி, தீயை சரியான நேரத்தில் கண்டறியத் தவறுவதாலோ அல்லது சூழல் மோசமடைவதற்குள் தப்பிக்க இயலாததாலோ நிகழ்கின்றன என்று அதிகாரிகள் கூறுகின்றனா்.

எனவே, இக்கருவிகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துவது தில்லியின் தீ பாதுகாப்புச் சூழலை அடிப்படையிலேயே மாற்றியமைக்கும் என்று தீயணைப்புத் துறை கருதுகிறது.