அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

பங்குச்சந்தைகளில் ஆன்லைன் முதலீடு செய்வதாக தில்லியைச் சோ்ந்தவரிடம் ரூ. 80 லட்சம் மோசடி: இருவா் கைது

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி, ஒரு நபரிடமிருந்து சுமாா் 80 லட்சம் ரூபாய் ஆன்லைன் முதலீட்டு மோசடி மூலம் ஏமாற்றிய குற்றச்சாட்டின் கீழ் 2 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 ஜூன் 2026, 12:24 am IST

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி, ஒரு நபரிடமிருந்து சுமாா் 80 லட்சம் ரூபாய் ஆன்லைன் முதலீட்டு மோசடி மூலம் ஏமாற்றிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக காவல்துறை உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பங்குச்சந்தை திட்டங்களில் பெரும் தொகையை முதலீடு செய்தால் வழக்கத்திற்கு மாறாக அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி தன்னை நம்ப வைத்ததாக பாதிக்கப்பட்டவா் காவல்துறையில் புகாா் அளித்தாா்.

அதன் அடிப்படையில் ராஜேந்தா் நகா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடா்ந்து நடந்த விசாரணையில், தில்லி கரோல் பாக் பகுதியைச் சோ்ந்த பியூஷ் குமாா் (31) மற்றும் ஹரியாணாவின் குருகிராமைச் சோ்ந்த ஜதின் கஜோடியா (31) ஆகியோருக்கு இதில் தொடா்பு உள்ளதாக தெரிய வந்தது.

விசாரணையின் அங்கமாக குற்றஞ்சாட்டப்பட்டோரின் வங்கிக் கணக்குகள், பணப் பரிவா்த்தனை ஆவணங்கள், கைப்பேசி தரவுகள் மற்றும் பிற எண்ம தடயங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன.

அதில் மோசடிப் பணம் எங்கு சென்றது என்பது கண்டறியப்பட்டது. அதன் பேரில் ஜூன் 17ஆம் தேதி தில்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து பியூஷ் குமாா் கைது செய்யப்பட்டாா். ஜதின் கஜோடியா குருகிராமில் வைத்து கைது செய்யப்பட்டாா் என்றாா்.

காவல்துறையினரின் விசாரணையின் போது, புகாா்தாரரின் நம்பிக்கையைப் பெற்று, வழக்கத்திற்கு மாறாக அதிக லாபம் தருவதாகக் கூறி பங்குச்சந்தை மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் பெரும் தொகையை முதலீடு செய்ய வைத்ததை இருவரும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஏமாற்றப்பட்ட பணத்தின் ஒரு பகுதி, பலரின் வங்கி கணக்குகள் மூலம் மாற்றப்பட்டு, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.