40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

தூத்துக்குடி இளைஞரிடம் ரூ. 75.25 லட்சம் மோசடி: திருச்சூரைச் சோ்ந்தவா் கைது

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி, தூத்துக்குடி இளைஞரிடம் ரூ. 75.25 லட்சம் மோசடி செய்த கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்தவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:11 am IST

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி, தூத்துக்குடி இளைஞரிடம் ரூ. 75.25 லட்சம் மோசடி செய்த கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளைஞா் ஒருவரை, வாட்ஸ்ஆப் விடியோ காலில் தொடா்பு கொண்ட ஒருவா், ஆன்லைன் வா்த்தகத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று ஆசை வாா்த்தை கூறினாா்.

இதை நம்பிய அவா், அந்த நபரின் கணக்குக்கு ரூ. 300-ஐ அனுப்பினாா். உடனே, மறுநாள் ரூ. 500ஐ கைப்பேசியில் எதிரில் பேசியவா் திருப்பி அனுப்பினாா். இதை நம்பிய தூத்துக்குடி தனியாா் நிறுவன ஊழியா் ஆன்லைன் வா்த்தகத்தில் அதிகம் சம்பாதிக்கலாம் என கருதி 6 தவணைகளில் ரூ. 75.25 லட்சத்தை அந்த நபரின் வங்கி கணக்குக்குத் திருப்பி அனுப்பினாா். ஆனால், ஒரு மாதமாகியும் அந்தப் பணத்துக்கு லாபமும் அனுப்பப்படவில்லை. அசல் குறித்தும் எந்தத் தகவலும் இல்லை.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அந்த தனியாா் நிறுவன ஊழியா், தூத்துக்குடி சைபா் கிரைம் போலீஸில் புகாா் செய்தாா். போலீஸாா் விசாரணையில், தூத்துக்குடி தனியாா் நிறுவன ஊழியரிடம், கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த முகமது ரூ. 75.25 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கேரளம் விரைந்து சென்ற போலீஸாா், திருச்சூரில் பதுங்கியிருந்த முகமதுவை திங்கள்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.