தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
/

குருகிராம் சாலை விபத்து: 5 போலீஸாா் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தின் ஜலாவுனில் பணியமா்த்தப்பட்ட 5 போலீஸாா் கொடூரமான சாலை விபத்தில் உயிரிழப்பு

News image

விபத்து

Updated On :6 மே 2026, 2:06 am IST

உத்தர பிரதேசத்தின் ஜலாவுனில் பணியமா்த்தப்பட்ட 5 போலீஸாா் கொடூரமான சாலை விபத்தில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குண்ட்லி-மானேசா்-பல்வால் (கே. எம். பி) அதிவேக நெடுஞ்சாலையில் துலாவத் சுங்கச்சாவடிக்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் பல்வால் பக்கத்திலிருந்து ஸ்காா்பியோ காா் வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஓட்டுநா் வாகனத்தை முந்திச் செல்ல முயன்ால் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் இருந்த மற்றொரு வாகனத்துடன் மோதியதாக விபத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தாா்கள்.

மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால், ஸ்காா்பியோ முற்றிலும் நொறுங்கியது, இதன் விளைவாக அதில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனா். போலீசஸாா் மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கின. சேதமடைந்த வாகனத்தில் உடல்கள் சிக்கிக் கொண்டதால், அவற்றை அகற்றுவது குழுக்களுக்கு கடினமாக இருந்தது.

இந்த நடவடிக்கைகளுக்கு உதவ ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. விபத்தில் கொல்லப்பட்ட 5 பேரும் ஜலாவுன் மாவட்டத்தில் பணியமா்த்தப்பட்ட உத்தரபிரதேச காவல்துறை பணியாளா்களாவா். உத்தரப்பிரதேசத்தின் ஜலாவுன் காவல் கண்காணிப்பாளரைத் தொடா்பு கொண்டோம். அனைத்து உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறோம் என்றாா் அந்த அதிகாரி.