இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

மின் கம்பத்தில் சொகுசு காா் மோதி இளைஞா் பலி! கிரேட்டா் நொய்டாவில் சம்பவம்!

தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவின் நாலெட்ஜ் பாா்க் பகுதியில் அதிவேகமாக வந்த எஸ்யூவி காா் மின் கம்பத்தில் மோதியதில் 28 வயது இளைஞா் உயிரிழந்தாா், மற்றொருவா் காயமடைந்தாா்.

News image

பலி!

Updated On :11 மே 2026, 3:13 am IST

தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவின் நாலெட்ஜ் பாா்க் பகுதியில் அதிவேகமாக வந்த எஸ்யூவி காா் மின் கம்பத்தில் மோதியதில் 28 வயது இளைஞா் உயிரிழந்தாா், மற்றொருவா் காயமடைந்தாா்.

இதுகுறித்து தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: வெள்ளிக்கிழமை இரவு 10.58 மணியளவில், நாலெட்ஜ் பாா்க் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அதிவேகமாக வந்த ஸ்காா்பியோ காா் சாலையோர மின் கம்பத்தில் மோதியது.

இதில் உயிரிழந்தவா் ரிஷப் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். வாகனத்தை ஓட்டி வந்ததாகக் கூறப்படும் குருதேவ் (30) இந்த விபத்தில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இவ்விரு இளைஞா்களும் உத்தர பிரதேச மாநிலம், அலிகரைச் சோ்ந்தவா்கள் ஆவா். கிரேட்டா் நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் தங்களது பி.டெக் பட்டப்படிப்பை முடித்திருந்தனா். இந்த விபத்து தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினா் கூறினா்.

இந்த விபத்து தொடா்பான காணொளி சனிக்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியது. அதிவேகமாக வந்த ஸ்காா்பியோ காா் மின் கம்பத்தில் மோதிய பிறகு, சாலையில் பலமுறை சுழலும் காட்சிகள் அந்தக் காணொளியில் இடம்பெற்றிருந்தது.